Thursday, March 5, 2026
HomeUncategorizedபொன்முடியை விசாரணைக்காக அழைத்துச் செல்கிறது அமலாக்கத்துறை!

பொன்முடியை விசாரணைக்காக அழைத்துச் செல்கிறது அமலாக்கத்துறை!

அமைச்சர் பொன்முடியின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வந்தது!
அமைச்சர் பொன்முடி வீட்டில் ED raid :

பொன்முடி மகன் கவுதம சிகாமணி செய்த முதலீடு ஒன்றுதான் ரெய்டுக்கு காரணம் என்கிறார்கள். 

இவர் ஆர்பிஐ ஒப்புதல் இன்றி இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்தாவில் முதலீடு செய்துள்ளார். 

அங்கே இருக்கும் பிடி எக்செல் மெகிண்டோ என்னும் நிறுவனத்தில் கடந்த 2008ல் முதலீடு செய்துள்ளார்.

1 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு பங்குகளை இவர் வாங்கியதாக கூறப்படுகிறது. 

இதேபோல் ஐக்கிய அரபு அமீரகத்தில் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் விதமாக 55 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அவர் முதலீடு செய்ததாகவும் புகார் வைக்கப்பட்டு உள்ளது.

அமைச்சர் பொன்முடி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடாக பெற்ற பணம் மேற்கூறிய முதலீடுகளாக மாற்றப் பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இதில் கருப்பு பணத்தை அவர் வெள்ளையாக்கியதாக அமலாக்கத்துறை சந்தேகம் கொண்டுள்ளதாம். 

இதற்கான ஆதாரங்கள் அடிப்படையில்தான் இந்த ரெய்டு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இதை அடுத்துதான் கைதா
பொன்முடி??

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments