திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பூம்பாறை, ஒரு அழகிய மலை கிராமமாகும். இது 3000 ஆண்டுகளுக்கு மேலான பழமையான கிராமம், மேலும் 18 சித்தர்களில் ஒருவரான போகர் சித்தர் வாழ்ந்த இடமாகும்.
பூம்பாறையில் பார்க்க வேண்டிய முதலிடம் குழந்தை வேலப்பர் கோவில் ஆகும். இந்த கிராமம் முழுவதும் இந்த கோவிலை சுற்றித்தான் அமைந்துள்ளது, மேலும் இது ஒரு பெரிய பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகன் சிலை போகர் சித்தரால் நவபாசானத்தைக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நவபாஷாணத்தால் செய்யப்பட்ட முருகன் சிலைகளில் ஒன்று பழனி மலை முருகனும், மற்றொன்று இங்குள்ள குழந்தை வேலப்பர் முருகனும் ஆகும். பழனி மலையில் உள்ள அனைத்து சிறப்பு அம்சங்களும் இக்கோவிலிலும் உள்ளன, ஏனெனில் இரு சிலைகளும் ஒரே போகரால் செய்யப்பட்டவை. இக்கோவிலில் முருகனை வழிபடுவோர் நோய்கள் நீங்கி வளம் பெற்று செழிப்புடன் வாழ்வார்கள் என்று மக்கள் ஆணித்தனமாக நம்புகின்றனர்.
பூம்பாறையின் அழகு அதன் இயற்கை அழகில் முழுமையாக பார்க்கலாம். கொடைக்கானலிலிருந்து பேருந்து மூலம் 20 கிலோமீட்டர் பயணித்தால் பூம்பாறைக்கு செல்லலாம். பயணத்தின் போது இயற்கை அழகு, காட்டு வளங்கள், வியூ பாயிண்டுகள், பள்ளத்தாக்குகள், அருவிகள், நீரோடைகள் ஆகியவற்றை ரசிக்கலாம். இங்கு காணப்படும் தட்பவெப்ப நிலைகள் கண்ணுக்கு குளிர்ச்சியையும் உடலுக்கு இதமாகவும் அளிக்கின்றன.
பூம்பாறையில் விவசாயம் முக்கிய தொழிலாகும். அழகான அடுக்கு நிலை விவசாய நிலங்கள், வெள்ளைப் பூண்டு, உருளைக்கிழங்கு, பீன்ஸ், சௌசௌ, முட்டைக்கோஸ், கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகளின் விவசாயம் இங்கு நடைபெறுகின்றன.
பூம்பாறையில் உள்ள வீடுகள் :
மிக நேர்த்தியாக கட்டப்பட்ட ஓடு வீடுகளும், வரிசையாக அடுக்கிய பெட்டிகள் போல் அமைந்துள்ள வீடுகளும் மிகவும் அழகாக அமைந்துள்ளது. அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை மிகவும் எளிமையாகவும், ஒற்றுமையாகவும் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. விவசாய தோட்டங்களில் இன்று வரை பாரம்பரிய முறைப்படி விதைகளை பாதுகாத்து வருகிறார்கள்.
ட்ராவலர் டிப்ஸ்:
சுற்றி பார்க்க நினைப்பவர்கள் அங்கிருக்கும் சிறிய ஓட்டல்களில் சாப்பிட்டுக் கொள்ளலாம் டீக்கடை வசதிகள் உண்டு. பூம்பாறையை சுற்றி பிரைவேட் ரெசார்ட் உண்டு. மாசில்லாத இயற்கைச் சோலையை கண்டு அனுபவிக்க விரும்புவர்கள் கண்டிப்பாக பூம்பாறைக்கு போகலாம்.
