Home Uncategorized “லவ் டுடே” பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி

“லவ் டுடே” பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு  வெளியான படம் ‘கோமாளி’. இப்படம் 90ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படமாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினைபெற்றது.

இதனையடுத்து,  தற்போது ‘கோமாளி’. பட இயக்குநரின் மற்றொரு படைப்பான  ‘லவ் டுடே’ திரைப்படம், திரையிடப்பட்ட திரையரங்களில் எல்லாம் வெற்றி நடைபெற்று வருகிறது. இதில், பிரதீப் ரங்கநாதன் இயக்கியதுடன், அவரே கதாநாயகனாக நடித்துள்ளார்.

இப்படம் 2 கே கிட்ஸ்களின் சமகால காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளன. இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் நாயகியாக இவானா நடித்துள்ளார். 

மேலும், சத்யராஜ், ராதிகா மற்றும் யோகிபாபு உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கல்பாத்தி எஸ்.அகோரம் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் முதல் நாள் ரூ.3 கோடி அளவில் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இரண்டாம் நாள் ரூ.5.35 கோடியும், மூன்றாம் நாள் ரூ.6.25 கோடியும் வசூலித்து மொத்தம் மூன்று நாட்களில் படம் கிட்டத்தட்ட ரூ.14 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப்படத்தின் இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் தனது டுவிட்டர் பக்கத்தில் தியேட்டர் கதவுகளின் ஓரத்தில் இருந்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அதுவே எனக்கு சந்தோசத்தை தருகிறது. – என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version