Home Uncategorized தமிழ்நாட்டில் இரட்டை இலக்கங்களில் பாஜக வெற்றி – பிரசாந்த் கிஷோர்

தமிழ்நாட்டில் இரட்டை இலக்கங்களில் பாஜக வெற்றி – பிரசாந்த் கிஷோர்

பாஜகவுடன் வாக்கு வங்கி உள்ள பெரிய கட்சிகள் எதுவும் இதுவரை தமிழ்நாட்டில் கூட்டணி சேரவில்லை. இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளும், ஓபிஎஸ் அணி மற்றும் அமமுக ஆகியவை மட்டுமே இதுவரை அந்த கூட்டணியில் இணைய சம்மதம் தெரிவித்துள்ளன. ஏற்கெனவே பாஜகவுக்கும் பெரிய வாக்கு வங்கி இல்லாத நிலையில் சிறிய கட்சிகளுடன் சேர்ந்து பாஜக தேர்தலை சந்திக்க உள்ளது.

ஏற்கனவே எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளின் படி தமிழ்நாட்டில் 36 இடங்களுக்கும் மேல் திமுக கூட்டணி வெல்லும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் அதற்கு மாற்றாகக் கருத்து கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி இரட்டை இலக்கங்களில் வெற்றி பெறும் என்று அவர் கூறியுள்ளார். 

இது குறித்து தனது கணிப்பை தெரிவித்துள்ள பிரசாந்த் கிஷோர் ‘பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் கூறுவது போல இந்தியாவில் 370 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறுவது கடினம்’ என்றும், ‘தமிழ்நாட்டில் இரட்டை இலக்கங்களில் பாஜக வெற்றி பெறும்’ எனவும் அவர் கூறியுள்ளார். இது தமிழ்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  இருக்குது

Exit mobile version