அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள 297 அம்சங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையில், மலைக்க வைக்கும் பல அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அதன் முக்கிய துளிகள்:
விலைவாசி ஏற்றத்தைச் சமாளிக்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 சிறப்பு உதவித் தொகை!
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்!
இனி மகளிரைப் போலவே ஆண்களுக்கும் பேருந்தில் கட்டணமில்லா பயணம்!
மாணவர்கள் வங்கிகளில் பெற்ற கல்விக் கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும்.
ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர்கள் முற்றிலும் இலவசம்!
இல்லத்தரசிகளின் பணிச்சுமையைக் குறைக்க அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா ஃப்ரிட்ஜ் வழங்கப்படும்!
நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,500 என அதிரடி விலை நிர்ணயம்.
மாதம் ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.
பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2,000, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரூ.1,000 உதவித் தொகை.
தாலிக்கு தங்கம், அம்மா மினி கிளினிக், அம்மா இருசக்கர வாகனத் திட்டம் (ரூ.25,000 மானியம்) என அனைத்தும் மீண்டும் அமல்!
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பு உள் இடஒதுக்கீடு 10 சதவீதமாக உயர்வு!
வீடு இல்லாதவர்களுக்கு ‘அம்மா இல்லம் திட்டம்’ மூலம் கான்கிரீட் வீடுகள்.
மொத்தம் 297 அறிவிப்புகளுடன் களமிறங்கியுள்ள அதிமுக, “நாங்க வந்தா எல்லாம் இலவசம்” என்கிற ரீதியில் நம்பிக்கையற்ற அளவுக்கு ஆச்சரியமான வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது!
