Home செய்திகள் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தலைவருமான சோனியா காந்திக்கு நள்ளிரவில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவர் டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தகவலை அறிந்த ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்று அவரைச் சந்தித்தனர்.

தற்போது சோனியா காந்தியின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இருப்பினும், அவரது உடல்நிலை குறித்து அச்சப்படும் அளவிற்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும், அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இச்செய்தி காங்கிரஸ் தொண்டர்களிடையே சற்றுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version