அமெரிக்க – இசுரேலின் ஈரான் மீதானப் போரால் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் 612-பேர் ஈரானில் சிக்கித் தவிக்கின்றனர். இன்றளவிலும் இவர்களை மீட்டெடுத்திட இந்திய ஒன்றிய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சமதா கட்சி சார்பாக இதனைக் கண்டித்து சென்னை, நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவன் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த இந்த 612 மீனவர்களையும் உடனடியாக மீட்டெடுத்திட வலியுறுத்தி கோரிக்கைகளை முன்னத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சமதா கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் பூங்கா மோகன் தலைமை தாங்கினார். சமதா கட்சியின் மாநில துணைத் தலைவர் ஜெகநாதன் வரவேற்புரையாற்றினார். மாநில இளைஞர் அணித் தலைவர் கெளதம் முன்னிலை வகித்தார். சமதா கட்சியின் அகில இந்திய முதன்மைப் பொதுச் செயலாளர் கோன் கண்டன ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். சிங்காரவேலர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பி.ஜி. ஆனந்தன் கண்டன உரையாற்றினார்.
சி.மு.க.வின் பொதுச் செயலாளர் பா.பிரபாகரன், பொருளாளர் ஆர்.வி.தேசப்பன், சந்திரசேகரன், செல்வராஜ், மீனாட்சி சரவணன், கார்த்தி சத்தியா, குபேரா, சாந்து பாஷா, சரவணா, ரமேஷ், தங்கராஜ், சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர்.