Home Uncategorized புதுகை கம்பன் பொன்விழா தேதி அறிவிப்பு

புதுகை கம்பன் பொன்விழா தேதி அறிவிப்பு

புதுக்கோட்டை கம்பன் கழகம்  50ஆம் ஆண்டு பொன் பெருவிழா தேதி அறிவிப்பு ஆலோசனை கூட்டம் தலைவர் திரு எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் கம்பன் கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கம்பன் 50 ஆம் ஆண்டு பொன் பெருவிழா  பெருவிழாவை 18/ 7 /2025 வெள்ளிக்கிழமை முதல் 27/7/2025 ஞாயிற்றுக்கிழமை வரை வழக்கம் போல் பத்து நாள்கள் சிறப்பாகக் கொண்டாடுவது என்று முடிவு செய்து தேதியைத் தலைவர் அறிவித்தார்.

மேலும் ,  விழாமங்கலம், விருதளிப்பு, பட்டிமன்றம், வழக்காடு மன்றம், கவிதைச்சோலை, சுழலும் சொல்லரங்கம்,நற்றமிழ் முற்றம், கவியரங்கம், ஏழில் உரை, பரிசளிப்பு, கம்பநாட்டியம், பாட்டுமன்றம், சந்திப்பு வளையம், கனல் உரை, கம்பனிசை அரங்கம் உள்ளிட்ட பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

6.7.25 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு கம்பன்கழகப் பொன் பெருவிழா போட்டிகள்,  வைரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. இதில், கம்பன் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் கம்பன் கழகத்தின் செயலாளராக சொற்பொழிவாளர்  புதுகை ச. பாரதி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Exit mobile version