Home Uncategorized புதுக்கோட்டை கம்பன்கழகப் பெருவிழா 6 – ஆம் நாள் 17/07/2024 (முதல் பகுதி)

புதுக்கோட்டை கம்பன்கழகப் பெருவிழா 6 – ஆம் நாள் 17/07/2024 (முதல் பகுதி)

தலைப்பு :   

  டாக்டர்.ஜெய.ராஜமூர்த்தியின் சன்மார்க்க உரை   

    புதுக்கோட்டை மாநகரில் 49 வது ஆண்டாக கம்பன் பெருவிழா நடைபெற்று வருகிறது. அவ்வகையில் 6 ஆம் நாள் நிகழ்ச்சியாக இன்று (17/072024) நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதல் நிகழ்ச்சியாக “எழிலுரை” என்னும் பெயரில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் “மு.இயலரசன்நினைவு அறக்கட்டளை”யின் திரு.இயல் தமிழ் வேந்தன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறையின் அமைச்சர் தி. சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் தலைமை தாங்க, கவிதை உரையை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் திரு. இராசு. கவிதைப்பித்தன் அவர்கள் வழங்க நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.

சட்டமன்ற உறுப்பினர் திரு.வை.முத்துராஜா, திரு.எம்.சின்னதுரை, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் திரு.கே.பி.கே.தங்கமணி, முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் திரு.தென்னலூர். மா.பழனியப்பன், தமிழ்ச்சங்கச் செயலாளர் திரு. த.சந்திரசேகரன், நகர்மன்ற முன்னாள் துணைத்தலைவர் திரு.க.நைனாமுகமது, நகர்மன்ற உறுப்பினர் திரு.என்.சாத்தையா, வெண்ணாவல்குடி முன்னாள் ஊராட்சித்தலைவர் திரு. அரு.வடிவேலு, தொலைத்தொடர்புத்துறை முன்னாள் உறுப்பினர் திரு.எம்.எம்.பாலு மற்றும் ரத்ததானக் கழகத்தலைவர் திரு.சா.மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நாளின் முத்தாய்ப்பான நிகழ்ச்சியாக, “கம்பன் கண்ட சன்மார்க்கம்” என்கிற தலைப்பில், நற்றமிழ் நாயகர் டாக்டர்.ஜெய.ராஜமூர்த்தி அவர்கள் சன்மார்க்க நெறியின் மேன்மையையும், பன்னெடுங்காலத்திற்கும் முன்னரே கம்பன் தனது படைப்பில் சன்மார்க்கத்தை எப்படியெல்லாம் வலியுறுத்தினான் என்று “எழிலுரை” ஆற்றினார்.   

நிகழ்ச்சியின் முடிவில் ஒப்பந்தக்காரர். திரு.ராம.நாராயணசாமி அவர்கள் நன்றி கூறினார். தொடர்ந்து 7 ஆம் நிகழ்ச்சி நாளை (18/07/2024) அன்று நடைபெற உள்ளது.

Exit mobile version