Home Uncategorized ராஜராஜ சோழனின் 1039 வது சதய விழா!

ராஜராஜ சோழனின் 1039 வது சதய விழா!

மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த மற்றும் அரியணை ஏறிய தினமான ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 1039 ஆம் ஆண்டு சதய விழா அரசு விழாவாக 2 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது நேற்று தொடங்கிய விழாவின் முக்கிய நிகழ்வான ராஜராஜ சோழனுக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஓதுவார்கள் திருமுறை பாடியும் செண்டை மேளம், கொம்பு வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், தருமை ஆதினம் ஸ்ரீ ல ஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த  உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக கோவில் வளாகத்தில் இருந்து யானை மீது திருமுறை வீதி உலா தொடங்கி தஞ்சை நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது.

 

Exit mobile version