இன்று 65 கடவுளின் குழந்தைகளுக்கு அறுசுவை அன்னமிட்டு மகிழ்ந்த ராகவா லாரன்ஸ் !!
மக்களின் நேசத்தை வென்றெடுத்த மாஸ்டர் ராகவா லாரன்ஸ் தனது தொடர் சமூக சேவைகளின் அடுத்த படியாக துவங்கியுள்ள ‘கண்மணி அன்னதான விருந்து’ திட்டத்தில் பனையூரில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு விருந்தளிக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்கள் தங்கள் வீட்டு சொந்தமாக கொண்டாடும் அளவிற்கு, சமூகப்பணிகளால் எல்லோரது அன்பையும் பெற்று வருகிறார் மாஸ்டர் ராகவா லாரன்ஸ்.சமீபத்தில் ஏழை எளியோரும் அருவசுவை உணவை உண்ண வேண்டும் எனும் நோக்கில் அவர் அன்னையின் பெயரில் ‘கண்மணி அன்னதான விருந்து’ எனும் புதிய திட்டத்தை துவங்கியிருந்தார்.
இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக பனையூரில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகள் காப்பகமான லிட்டில் ஹார்ட்ஸ் இல்லத்தில் வசிக்கும் 65 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் அங்கு பணியாற்றுபவர்களுக்கும், இன்று ராகவா லாரன்ஸ் மாஸ்டரும் அவரது அன்னையும் இணைந்து அறுசுவை அசைவ விருந்தளித்தனர். இந்த அன்னதான விருந்து குறித்து மாஸ்டர் ராகவா லாரன்ஸ் கூறுகையில்..,
இவர்கள் எல்லோருமே கடவுளின் குழந்தைகளுக்கு இவர்களுக்கு சேவை செய்யும் சேவகனாக கடவுள் என்னை படைத்ததில் பெருமை கொள்கிறேன். இந்த அறுசுவை அண்னதான திட்டம் அனைவருக்குமானது. இதை இன்னும் சிறப்பான வகையில் முன்னெடுக்க வேண்டும் என்பதே என் நோக்கம் என்றார்.
