Home வானிலை தமிழகத்தில் இன்றும் கனமழை தொடரும்… வெப்பம் தணிந்து இதமான சூழல்!

தமிழகத்தில் இன்றும் கனமழை தொடரும்… வெப்பம் தணிந்து இதமான சூழல்!

தமிழ்நாட்டின் சமவெளிப் பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் பல இடங்களில் நேற்றைய மாலை வேளையில் பெய்த இடி மின்னலுடன் கூடிய மழை, அப்பகுதி மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

தமிழகக் கடலோரப் பகுதிக்கு அருகே தொடர்ந்து நிலவும் மத்திய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்றும் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கனமழைக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

குறிப்பாக, சென்னை முதல் புதுச்சேரி வரையிலான இடைப்பட்ட கடலோரப் பகுதிகளில் சில இடங்களில் பலத்த இடி மின்னலுடன் கூடிய தீவிர மழை பெய்யக்கூடும்.

இந்தத் தொடர் மழைப் பொழிவின் காரணமாக, பகல் நேர வெப்பநிலை இயல்பை விடக் சற்று குறைந்து, வெப்பத்தின் தாக்கம் தணிந்து இதமான சூழல் நிலவக்கூடும்.

Exit mobile version