Home Uncategorized பருவமழை தொடக்கம்… தமிழ்நாட்டில் தாக்கம்!சென்னைக்கு இன்று மழை வருமா?

பருவமழை தொடக்கம்… தமிழ்நாட்டில் தாக்கம்!சென்னைக்கு இன்று மழை வருமா?

தென்மேற்கு பருவமழை இன்று கேரளா பகுதியில் துவங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; இதன் காரணமாக கேரளா மற்றும் தெற்கு கடலோர கர்நாடகப் பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நேற்று சென்னையின் வடக்கு புறநகர்ப் பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்த நிலையில், இன்றும் பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்த பிறகு, மாலை நேரத்தில் வீசும் கடல் காற்று காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு (KTCC) ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

Exit mobile version