Home Uncategorized 2024 ஆம் ஆண்டு புதுக்கோட்டை கம்பன்பெருவிழா 7 – ஆம் நாள் நிகழ்ச்சி  (2 ஆம்...

2024 ஆம் ஆண்டு புதுக்கோட்டை கம்பன்பெருவிழா 7 – ஆம் நாள் நிகழ்ச்சி  (2 ஆம் பகுதி)

புதுக்கோட்டை கம்பன் பெருவிழா கடந்த 12/07/2024 அன்று முதல் சீரும் சிறப்புமுமாக நடந்து வருகிறது. அவ்வகையில் நிகழ்ச்சியின் ஏழாம் நாளான (18/07/2024) இன்று இரண்டாம் பகுதியாக ‘வழக்காடு மன்றம்” நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு அமராவதிப் புதூர் ராஜராஜன் கல்விநிறுவனங்களின் நிறுவனரும், முன்ன்னாள் துணை வேந்தருமான முனைவர். திரு. எஸ். சுப்பைய்யா அவர்கள் தலைமை தாங்கினார்.
வரவேற்புரையை கம்பன் கழக இணைச்செயலாளர் முனைவர். திரு. வெ.முருகையன் அவர்கள் நிகழ்த்த, மதர்தெரசா கல்லூரி திரு. சி.உதயகுமார், ஏ.டி.ஆர். பள்ளி & ஏ.டி.ஆர். மஹால் திரு. தர்மராஜபிரபு ஆகியோர் வாழ்த்துரை வழங்க, பி.எஸ்.கே. கல்வி நிறுவனங்கள் திரு. பி.கருப்பைய்யா , பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலை தூரக்கல்விமைய இயக்குநர் முனைவர். அ.பழனிச்சாமி, மாமலர் மருத்துவமனை டக்டர். ஜீ. மாரிமுத்து , அறந்தாங்கி நைனா முகமது கல்லூரி முதல்வர். முனைவர்.திரு.சி.திருச்செல்வம், மாமன்னர் கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.புவனேஸ்வரி மற்றும் மாமன்னர் கல்லூரி துறைத்தலைவர் முனைவர் திரு. ஏ.எஸ். நாகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக வழக்காடு மன்றம் நடைபெற்றது. இதில் ‘இலக்குவனைக் காட்டிலும் பரதனை உயர்த்திப் பாடிய கம்பன் செயல் சரியல்ல” என புதுகை பாரதி அவர்கள் வழக்குத் தொடுக்க, அந்த வழக்கை ஏற்க மறுத்து திருவண்ணாமலை முனைவர்.ம. எழிலரசி ஆகியோர் அனல்பறக்க உரைவீச்சு நிகழ்த்தினர்.

பரபரப்பான இந்த வழக்காடு மன்றத்திற்கு “நகைச்சுவைத்தென்றல்” முனைவர் எம்.ராமச்சந்திரன் அவர்கள் தனக்கே உரிய பாணியில் இருதரப்பையும் கண்காணித்து, வழிநடத்தி நடுவராக திறம்பட செயல்பட்டது நிகழ்ச்சிக்கான மணிமகுடம் என்றால் மிகையில்லை. வழக்காடு மன்றத்தின் தீர்ப்பாக, “இலக்குவனையே கம்பன் அதிகளவில் உயர்த்திப்பாடியுள்ளார்” என தீர்ப்பு வழங்கப்பட்டது. 

பெருவிழாவின் நிறைவில் விழாக்குழு உறுப்பினர். திரு. எம்.எஸ்.ரவி நன்றியரை ஆற்றினார்.

Exit mobile version