Home Uncategorized ரோம் நகரம் தீப்பற்றி எரிந்த பொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்த தினமின்று!

ரோம் நகரம் தீப்பற்றி எரிந்த பொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்த தினமின்று!

ரோம் நகரம் தீப்பற்றி எரிந்த பொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்த தினமின்று!

ரோமானிய அரசை ஆண்ட, Julio-Claudian வம்சத்தின் கடைசி வாரிசாக கிபி 54 இல் பதவியேற்கிறான் ” நீரோ “. இயற்கையிலேயே ,ரோமானிய கலாச்சாரத்திலும்,நுண்கலைகளிலும் ,விளையாட்டிலும் ஆர்வங்கொண்ட நீரோ-அவற்றை ஊக்குவிற்கும் பொருட்டு-அதற்கான பல தியேட்டர்களையும்,விளையாட்டு கூடங்களையும் கட்டினான்.

அவன் காலத்தில் ரோமானிய கலாச்சாரம் அனைத்திலும் சிறந்து விளங்கியது. கிபி 64 ஆம் வருடம்–ஜூலை மாதம் 18 தேதி இரவு,ரோம் நகரத்தில் தீடிரென்று தீ “பரவியது”.அகோரப் பசிகொண்ட அந்த தீ மொத்த ரோம் நகரையும் தின்று தீர்த்து சாம்பலாக்கியது.மக்கள் பெரும் துயருக்குள்ளாகினர்.

சம்பவம் கேள்விப்பட்டவுடன்,தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறு நாட்களுக்கு உள்ளாகவே நிவாரணத்தை,தன் சொந்தப் பணத்தில் ஏற்படுத்தி தந்தான்.

அவர்கள் தீ துயரை மறக்க கலைநிகழ்ச்சிகளை கூட நடத்தினான். அப்போது மனமாற்றத்திற்காக மன்னன் பிடில் வாசித்ததானாம்..

Exit mobile version