Sunday, April 5, 2026
HomeUncategorizedசென்னையில் திருப்பதி தேவஸ்தான கோயிலில் ராமர் கோயில் திறப்பு

சென்னையில் திருப்பதி தேவஸ்தான கோயிலில் ராமர் கோயில் திறப்பு

சென்னை திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில் பிரமாண்ட ராமர் சிலை திறப்பு

தி.நகர் திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில் ராமர் சிலை திறப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் துவக்க விழா நடந்தது.

அயோத்தி ராமஜென்ம பூமியில் கட்டப்பட்டுள்ள கோவில் கருவறையில் ராமர் சிலையின் பிராண பிரதிஷ்டை என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி வரும், 22ம் தேதி நடக்க உள்ளது.

அன்றைய தினம் அனைவர் இல்லத்திலும் தீபங்கள் ஏற்றி கொண்டாடுங்கள் என்ற வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பெருமாள் கோவிலில் அயோத்தியில் ராமர் பிரதிஷ்டையை முன்னிட்டு வரும் 26-ந்தேதி வரை தினசரி மாலை சிறப்பு பஜனை நிகழ்ச்சி நடக்கிறது.

இதற்கான துவக்க விழா மற்றும், பத்தரை அடி உயர ராமபிரான் சிலை திறப்பு விழா நடந்தது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments