Wednesday, March 11, 2026
HomeUncategorizedரூ.200 கோடி ஜீவனாம்சத்தை ஏற்க மறுக்கும் நடிகை சமந்தா

ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை ஏற்க மறுக்கும் நடிகை சமந்தா

நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். அவர்கள் இரு குடும்பத்தினர் சம்மதத்தின் அடிப்படையில் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பின் இருவரும் ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். இடையில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சமந்தா திருமணத்துக்கு பிறகு ஒரு படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார்.

இது நாக சைதன்யாவுக்கு பிடிக்கவில்லை. அதிலிருந்தே இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே இருவரும் பிரிவதென்று முடிவு எடுத்ததையடுத்து, நாகசைதன்யா குடும்பத்தில் இருந்து சமந்தாவுக்கு ரூ.200 கோடி ஜீவனாம்சம் தருவதாக கூறினார்களாம்.

ஆனால் சமந்தா இதை ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ‘நான் எனது சொந்த காலில் நிற்க கூடியவள். யாருடைய பணமும் எனக்கு வேண்டாம்‘ என்று சமந்தா கூறிவிட்டாராம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments