Monday, March 23, 2026
HomeUncategorizedரவி மோகன் - எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

ரவி மோகன் – எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

ரவி மோகன் – எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகர் ரவி மோகன் கைவசம் ‘கராத்தே பாபு, பராசக்தி, ஜீனி, தனி ஒருவன் 2’ மற்றும் இயக்குநர் கார்த்திக் யோகி படம் ஆகிய 5 திரைப்படங்கள் உள்ளது.

இதில் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கும் படத்தை ரவி மோகனே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ மூலம் தயாரிக்கிறார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளார்.

தற்போது, இப்படத்துக்கு ‘BRO CODE’ என டைட்டில் வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ரவி மோகனுக்கு ஜோடியாக நான்கு ஹீரோயின்ஸ் நடிக்கவுள்ளனர். இதன் ஷூட்டிங்கை வருகிற செப்டம்பர் மாதத்தில் இருந்து ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments