Thursday, August 13, 2026
Homeசெய்திகள்இடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல! – சமூக பிரதிநிதித்துவமே முதன்மை!

இடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல! – சமூக பிரதிநிதித்துவமே முதன்மை!

இடஒதுக்கீடு முறையின் முதன்மை நோக்கம் சமூக சமத்துவமின்மையையும், தலைமுறை தலைமுறையாகத் தொடரும் வரலாற்றுரீதியான பின் தங்கிய நிலையையும் போக்குவதே தவிர, அது ஒரு வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல என்பதை சுப்ரீம் கோர்ட்டிலும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

பட்டியலின (SC), பழங்குடியின (ST) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட (OBC) பிரிவினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு என்பது, அரசதிகாரத்திலும் முடிவெடுக்கும் உயர் பதவிகளிலும் வரலாற்று ரீதியாக மறுக்கப்பட்ட பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கான வழிமுறையாகும்.

எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குள் பொருளாதாரக் காரணியான ‘கிரிமிலேயர்’ (Creamy Layer) வரம்பைக் கொண்டுவருவது அல்லது பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது, சமூக ரீதியாகப் பின்தங்கிய ஒட்டுமொத்தப் பிரிவினரின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்துவிடும் என்பதே அரசின் வாதமாகும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments