Saturday, May 9, 2026
Homeசெய்திகள்புதுச்சேரி ரிசார்ட்டை விட்டு வெளியேறும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள்!

புதுச்சேரி ரிசார்ட்டை விட்டு வெளியேறும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள்!

தமிழக அரசியலில் நிலவும் குழப்பமான சூழலில், புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்கியிருந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தற்போது அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்; எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு “தெரியாது” என்பது போல சைகை காட்டியபடி அவர்கள் நகர்ந்த நிலையில், இன்று மதியத்திற்குள் அனைவரும் சென்னைக்கு அழைத்து வரப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 25-க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏ-க்கள் இந்த விடுதியில் தங்கியிருந்த சூழலில், கடந்த இரண்டு நாட்களாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (AMMK) மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜும் அங்கு தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சியமைப்பதில் நீடிக்கும் இழுபறியால், கட்சித் தாவல்களைத் தவிர்க்கும் பொருட்டு இந்த ‘ரிசார்ட் அரசியல்’ முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments