தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாடிய RJ பாலாஜி வீடியோ வைரல்!
திரையரங்குகளில் ரசிகர்களுடன் ‘கருப்பு’ படத்தைப் பார்த்த இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி, படம் முடிந்ததும் ரசிகர்களின் அமோக வரவேற்பைக் கண்டு உணர்ச்சிவசப்பட்டு கத்திக் கொண்டாடியது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பைனான்ஸ் பிரச்சனைகள் மற்றும் ரிலீஸ் தள்ளிப்போன பதற்றங்கள் என ஏகப்பட்ட தடைகளைக் கடந்து படம் வெளியானதால், தியேட்டரில் கிடைத்த இந்த மாபெரும் அங்கீகாரம் அவரை மெய்சிலிர்க்க வைத்தது. ரசிகர்களின் விசில் சத்தத்திற்கும் ஆரவாரத்திற்கும் மத்தியில், தனது மகிழ்ச்சியை அடக்க முடியாமல் உற்சாக மிகுதியில் அவரும் சேர்ந்து கொண்டாடிய வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
ஒரு இயக்குனராகத் தான் எடுத்த முயற்சிக்குக் கிடைத்த வெற்றியைப் பார்த்து அவர் காட்டிய அந்த எதார்த்தமான வெளிப்பாடு, படக்குழுவினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

