தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் நேற்று நடைபெற்ற தொழில்துறை ஆலோசனைக் கூட்டத்தில், பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம் குறித்து முக்கிய விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தில் தற்போது என்ன நிலை நிலவுகிறதோ அதையே தொடர வேண்டும் என்றும், அடுத்தகட்டமாக எந்தப் புதிய பணிகளையும் இப்போதைக்கு மேற்கொள்ள வேண்டாம் என்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில், இத்திட்டம் குறித்து விரைவில் தனியாக ஒரு விரிவான ஆய்வுக் கூட்டம் நடத்தி, அதன் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
அரசின் இந்தத் தற்காலிகத் தடை உத்தரவு, நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் நிலவி வந்த இழுபறியால் பாதிக்கப்பட்டிருந்த விவசாயிகளிடையே கவனத்தைப் பெற்றுள்ளதோடு, திட்டத்தின் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

