Home Uncategorized சபரிமலையில் ரோப்கார் வசதி!

சபரிமலையில் ரோப்கார் வசதி!

சபரிமலை ரோப்வே திட்டத்திற்கு மாநில வனவிலங்கு வாரியம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.  சபரிமலையில் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை பொருள்களை எடுத்துச் செல்ல தற்போது டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனி இப்பணியில் டிராக்டர்கள் அகற்றப்பட்டு ரோப் கார்கள் பயன்படுத்தப்படும்.   இந்த ரோப்வே பம்பாவிலிருந்து சன்னிதானத்திற்கு பொருட்கள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகளை கொண்டு செல்வதற்கும்  நெரிசலை குறைக்கவும் உதவும்.  

  2.7 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த ரோப்வே அமைக்க 180 முதல் 250 கோடி ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.   ஆண்டுதோறும் 40,000 முதல் 60,000 டன் பொருட்களை எடுத்துச் செல்லும் வகையில் இந்த ரோப்வே திட்டம் வடிவமைக்கப்படும். இந்த திட்டத்திற்கு கேரள மாநிலத்தின் வனவிலங்கு வாரியம் நேற்று ஒப்புதல் அளித்தது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற ஆன்லைன் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த திட்டம் இனி மத்திய அரசிடம் இறுதி ஒப்புதலுக்காக அனுப்பப்படும்.

Exit mobile version