Home உலகம் “ஊதிய உயர்வு கோரி போராட்டம்.. சாம்சங் ஊழியர்கள் வேலைநிறுத்த எச்சரிக்கை!”

“ஊதிய உயர்வு கோரி போராட்டம்.. சாம்சங் ஊழியர்கள் வேலைநிறுத்த எச்சரிக்கை!”

தென் கொரியாவில் சுமார் 40,000 சாம்சங் ஊழியர்கள் தங்களுக்குச் சரியான ஊதிய உயர்வு வழங்கக் கோரி வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாம்சங் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் ஈட்டி வரும் பிரம்மாண்ட லாபத்தில் தகுந்த பங்கைத் தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும், நிர்வாகிகளின் வருமானம் மட்டுமே உயர்வதை அனுமதிக்க முடியாது என்றும் அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் 18 நாட்களுக்குத் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் ஊழியர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங்கில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் பதற்றம், அதன் உற்பத்தி மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version