Home உலகம் ஹோர்முஸ் ஜலசந்தியில் மீண்டும் தாக்குதல்! – கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு பெரும் அச்சுறுத்தல்!

ஹோர்முஸ் ஜலசந்தியில் மீண்டும் தாக்குதல்! – கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு பெரும் அச்சுறுத்தல்!

மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) கடல் பகுதியில் மற்றொரு கச்சா எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச அளவில் மிக முக்கியமான எரிபொருள் வர்த்தக பாதையான இந்த ஹோர்முஸ் வழித்தடத்தை மீண்டும் திறக்கும் நோக்கில், அமெரிக்க ராணுவம் தொடர்ச்சியாக 10-வது இரவாக ஈரானின் ஏவுகணை தளங்கள் மற்றும் ராணுவ கட்டுப்பாட்டு மையங்கள் மீது கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

அதேசமயம், ஓமன் அருகே சென்று கொண்டிருந்த மற்றொரு எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், அதில் தீப்பிடித்ததை அடுத்து ஊழியர்கள் கப்பலை விட்டு வெளியேறினர்; இத்தாக்குதலுக்கு ஈரானின் புரட்சிகர காவல் படை பொறுப்பேற்றுள்ளது.

இந்தத் தொடர் மோதல்களால் சர்வதேச கடல்வழி வர்த்தகம் ஸ்தம்பித்து கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும் அபாயம் உருவாகியுள்ள நிலையில், பதற்றத்தைத் தணிக்க தூதரக ரீதியிலான தீவிர முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Exit mobile version