இங்கிலாந்தில் பள்ளி வேன் கவிழ்த்து விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 1 மாணவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். மேலும் 21 மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

இங்கிலாந்தின் சோமர்செட் நகரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளி சார்பில் எக்ஸ்மூர் உயிரியல் பூங்காவிற்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதன் பிறகு மாணவர்கள் மீண்டும் வானில் பள்ளிக்கு திரும்பி வரும் பொது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. வெட்டன் கிராஸ் என்ற இடத்திற்கு அருகே சென்றபோது அந்த வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஒரு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 21 மாணவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு பணையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.