Friday, July 17, 2026
Homeசெய்திகள்இன்னும் ஏன்டா முழிச்சிட்டு இருக்க தூங்கு…உத்தரப் பிரதேசத்தில் கொளுத்தும் வெயில்: ஏசி ஏடிஎம் மையத்தில் தூங்கிய...

இன்னும் ஏன்டா முழிச்சிட்டு இருக்க தூங்கு…உத்தரப் பிரதேசத்தில் கொளுத்தும் வெயில்: ஏசி ஏடிஎம் மையத்தில் தூங்கிய நபர்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோடை வெப்பம் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, மெள (Mau) மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

அங்கு, வெப்பத்தைத் தாங்க முடியாமல் ஒருவர் ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட ATM மையத்திற்குள் சென்று தரையில் படுத்து தூங்கியுள்ளார். ATM-ஐ பயன்படுத்த வந்தவர்கள் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இந்த சம்பவம் புகைப்படம் மற்றும் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவியது.

தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அந்த நபரை எழுப்பி வெளியே அனுப்பினர். விசாரணையில், அவர் கடும் வெப்பத்திலிருந்து தப்பிக்க குளிரான இடத்தைத் தேடி ATM-க்குள் சென்றதாக கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments