Monday, May 4, 2026
Homeசெய்திகள்விஜய் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

விஜய் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆரம்ப கட்டத்திலிருந்தே முன்னிலை வகித்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 68 இடங்களில் தவெக முன்னிலையில் உள்ளது.

வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், தவெக முன்னிலையில் இருப்பது விசய் ரசிகர்கள் மற்றும் அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள சோசப் விய் இல்லத்தின் முன்பு குவிந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், விஜய் இல்லத்திற்குச் செல்லும் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்து முறைப்படுத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments