பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் நடந்த கட்சி நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் சீமான் பேசியதாவது:
எப்போது என்னை நம்பப் போகிறீர்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை தமிழகத்தில் மோடி போட்டியிட்டால் எனக்கு ஒரு விடிவுகாலம் வரும். ஏனெனில் பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட்டால் நான் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன்.
