சென்னையில் நிலவும் விறுவிறுப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், தமிழக வெற்றி கழகத் (TVK) தலைவர் விஜய்யின் நீலாங்கரை இல்லத்திற்கு முன்பாக தற்போது அமைதி நிலவி வருகிறது.
தேர்தல் முடிவுகள் வெளியான தொடக்க நாட்களில் கொண்டாட்டங்களுக்காகக் குவிந்திருந்த தொண்டர்கள், தற்போது ஆட்சி அமைப்பதில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற சூழல் மற்றும் இழுபறி காரணமாக ஆரவாரங்கள் இன்றி நீலாங்கரை இல்லம் தற்போது நிசப்தமாகக் காணப்படுகிறது. ஆளுநரின் அடுத்தகட்ட முடிவைப் பொறுத்தே மீண்டும் நீலாங்கரை பரபரப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
