இப்போது இருக்கும் காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மொபைல் போன், டிவி, கம்ப்யூட்டர் என்று ஸ்கிரீன்களுக்கு அடிமையாகி விட்டார்கள். வேலை செய்பவர்கள் கம்ப்யூட்டர். மொபைல் போன் இல்லாமல் வேலையே நடக்காது என்ற சூழ்நிலையும் இருந்து வருகிறது.
அது மட்டும் இல்லாமல் கை குழந்தைகளுக்கு கூட உணவு ஊட்டும் பொழுது தாய்மார்கள் மொபைல் போன்களை காட்டிக் கொண்டும் பாடல்களை அதில் காண்பித்துக்கொண்டும் குழந்தைகளை வேடிக்கை பார்க்க வைத்து கொண்டு உணவு ஊட்டி விடுகின்றனர். இது அவர்களுக்கு அப்படியே பழகியும் விடுகிறது. அப்போது ஆரம்பிக்கும் இந்த பழக்கம் பல ஆண்டுகள் அப்படியே தொடர்கிறது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் கண்கள் மிகவும் பாதிப்படுகிறது.
பல குழந்தைகள் சிறு வயதிலேயே கண்ணாடி அணிய தொடங்கிவிட்டனர். கண்கள் என்பது கடவுள் நமக்கு கொடுத்த பெரிய வரம் என்றே சொல்லலாம். அதனை நாம் எந்த அளவிற்கு பாதுகாக்க முடியுமோ அந்த அளவிற்கு பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நமது கண்களை பாதுகாத்துக் கொள்ள சில வழிமுறைகளை இந்த பதிவில் பார்ப்போம்.
என்ன செய்யலாம்
*பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.
*தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும்.
*அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரை சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்.
*வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டை மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது.
*தினமும் 1 கேரட் சாப்பிடுவது நல்லது.
*தினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்னைகள் வராது.
*தினமும் 5 பாதாம்களை சாப்பிட்டு வரவேண்டும்.

*இரவில் படுக்கும் முன் திரிபலா சூர்ணம் (கடுக்காய் – நெல்லிக்காய் – தான்றிக்காய் அடங்கிய இது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) 5 கிராம் அளவில் எடுத்து ஒன்றரை தேக்கரண்டி (7.5 I.L) த்ரைபல கிருதம் என்னும் நெய்யை லேசாக உருக்கிப் பொடியுடன் குழைத்து, பிறகு அரை தேக்கரண்டி தேன்விட்டுக் குழைத்து நக்கிச் சாப்பிடக் கண் குளிர்ச்சியாகும். கண்நோய் எதுவும் வராமல் பாதுகாக்க இது உதவும்.
*இரவு நேரங்களில் இரு உள்ளங்கால்களின் நடுவிலும் பசுவின் நெய்யைத் தேய்த்துக் கொள்ளுதல். உணவில் நெய் சேர்த்துக் கொள்ளுதல், பௌர்ணமியன்று இரவு சந்திரனைப் பார்த்துக் கொண்டிருத்தல். பற்களை முறைப்படித் துலக்குதல்.
முடிந்த அளவிற்கு மொபைல் போன்களை குழந்தைகளிடமிருந்து தள்ளி வைப்பதும் தேவைப்படும்போது மட்டும் கம்ப்யூட்டர், மொபைல் போன் பயன்படுத்துவது உள்ளிட்டவைகளை செய்தாலே நமது கண்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.


