Home Uncategorized ஸ்மார்ட் ஃபோன்களால் திருமண உறவில் பாதிப்பு – 88% தம்பதியர் கருத்து

ஸ்மார்ட் ஃபோன்களால் திருமண உறவில் பாதிப்பு – 88% தம்பதியர் கருத்து

தங்களின் திருமண வாழ்வில் ஸ்மார்ட் ஃபோன்கள் பாதிப்பை ஏற்படுத்துவதாக 88% தம்பதியர் தெரிவிச்சிருக்காய்ங்கர்.

 தங்கள் இணையருடன்(கணவர் அல்லது மனைவியுடன்) பேசிக்கொண்டிருக்கும்போதும் ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்துவதாக 67% தம்பதியர் ஒப்புக் கொண்டிருக்காய்ங்க. 

ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது கணவர் / மனைவி குறுக்கீடு செய்தால் எரிச்சலடைவதாக 70% பேர் தெரிவிச்சிருக்காய்ங்க. 

கணவர் / மனைவி உடன் பேசும்போது பேச்சில் முழுமையாக கவனம் செலுத்த முடிவதில்லை என 69% பேர் தெரிவித்துள்ளனர். ஸ்மார்ட் ஃபோன்கள் காரணமாக கணவர் / மனைவி உடனான உறவு பலவீனமடைந்திருப்பதாக 66% பேர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

கணவர் / மனைவி உடன் நேரத்தை செலவிடும்போது மிகவும் நிம்மதியாக உணர்வதாகவும், அதேநேரத்தில் குறைவான நேரத்தை மட்டுமே கணவர் / மனைவி உடன் செலவிடுவதாகவும் 84% தம்பதியர் தெரிவித்துள்ளனர்.  ஸ்மார்ட் ஃபோன்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை மாற்ற வேண்டும் என விரும்புவதாகவும் பெரும்பாலான தம்பதியர் தெரிவித்துள்ளனர். 

கணவர் / மனைவி உடன் அர்த்தமுள்ள உரையாடலை அதிகப்படுத்த விரும்புவதாக 90% தம்பதியர் தெரிவித்துள்ளனர். ஸ்மார்ட் ஃபோன்களை அணைத்து வைக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் தம்பதியர் இடையே ஆரோக்கியமான உறவை மேம்படுத்த முடியும் என பலரும் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ, சைபர் மீடியா ரிசர்ச் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய ஓர் ஆய்வு முடிவிலிருந்து

Exit mobile version