Home Uncategorized சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழா

சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழா

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நாளை (13.08.2023) மாலை வரை தனியார் வாகனங்களில் பொதுமக்கள் குடில் அமைக்கும் பொருட்கள் எடுத்துச் செல்வதற்கு அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை இரவு தங்குவதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது

நாளை முதல் 17 ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் தங்கிக் கொள்ளலாம் 17 18 ஆம் தேதிகளில் பொதுமக்கள் முழுமையாக கீழே இறங்கி விட வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அறிவுறுத்தப்படுகிறது.

தாமிரபரணி ஆற்றைப் பொறுத்தவரை பொதுமக்கள் கெமிக்கல் சோப்பு ஷாம்பு பயன்படுத்தாமல் ஆழமான பாறைகள் நிறைந்த பகுதிகளுக்கு போகாமல் எப்போதும் போல குளிக்கலாம். அதில் எந்த தடையும் இல்லை. அது குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது

பொதுமக்கள் அனைவரும் அரசு துறைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version