ரயில் புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன் வரை வந்தே பாரத் ரயில்களில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை தென்னக ரயில்வே அறிமுகப்படுத்தி இருக்கிறது.
தென்னக ரயில்வே மண்டலத்தின் கீழ் வரும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு 15 நிமிடங்கள் வரை டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த அம்சத்தை செயல்படுத்த, பயணிகள் முன்பதிவு அமைப்பு (PRS) புதுப்பிக்கப்பட்டுள்ளது. இது இடைநிலை நிலையங்களிலிருந்து கிடைக்கக்கூடிய இருக்கைகளை ‘தற்போதைய முன்பதிவு’ ( current reservation) செய்ய அனுமதிக்கிறது.
கடைசி நிமிட பயணிகளுக்கு முன்கூட்டியே முன்பதிவு செய்யாமல் ரயிலில் ஏற வாய்ப்பு அளிக்கிறது.
முதல் கட்டமாக 8 ரயில்களில் மட்டும் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.
ரயில் எண். 20631:
மங்களூர் சென்ட்ரல் -திருவனந்தபுரம் சென்ட்ரல்
ரயில் எண். 20632: திருவனந்தபுரம் சென்ட்ரல் – மங்களூர் சென்ட்ரல்
ரயில் எண். 20627:
சென்னை எழும்பூர் -நாகர்கோவில்
ரயில் எண். 20628: நாகர்கோவில் -சென்னை எழும்பூர்
ரயில் எண். 20642: கோயம்புத்தூர்-பெங்களூரு கண்டோன்மென்ட்
ரயில் எண். 20646:
மங்களூர் சென்ட்ரல் -மட்கான்
ரயில் எண். 20671:
மதுரை பெங்களூரு கண்டோன்மென்ட்
ரயில் எண் 20677:
சென்னை சென்ட்ரல் விஜயவாடா
