கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) ஸ்டாலின் ஐபிஎஸ் உத்தரவின் பேரில், பொதுமக்களுக்கும் பிற வாகன ஓட்டிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கண்கூசும் எல்.இ.டி (LED) மற்றும் உயர்திறன் கொண்ட முகப்பு விளக்குகளை அகற்றும் அதிரடி நடவடிக்கையில் போக்குவரத்து காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அரசியல் கட்சிப் பிரமுகர்களின் வாகனங்கள், அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் சொகுசுப் பேருந்துகள் எனப் பாகுபாடின்றி, விதிகளுக்குப் புறம்பாகப் பொருத்தப்பட்டுள்ள இத்தகைய கூடுதல் விளக்குகள் மற்றும் ஒளிரும் அலங்கார விளக்குகளைத் தடுத்து நிறுத்தி போலீஸார் அகற்றி வருகின்றனர்.
இரவு நேரங்களில் எதிரே வரும் வாகன ஓட்டிகளின் கண்களைக் கூசச் செய்து, பெரும் சாலை விபத்துகளுக்குக் காரணமாக அமையும் இந்த விளக்குகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, விதிகாரர்களை எச்சரித்து அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது; எஸ்பி-யின் இந்த அதிரடி ஆக்ஷன் குமரி மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
