Home Uncategorized திருபுவனம் ஸ்ரீசரபேஸ்வரசுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகப் பெருவிழா 

திருபுவனம் ஸ்ரீசரபேஸ்வரசுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகப் பெருவிழா 

மயிலாடுத்துறை அருகேயுள்ள தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமானதும், சுவாமி பிரளயத்தில் நடுக்கம் வந்தபோது நடுக்கம் தீர்த்த நாதராக அருள்வழங்கியதும், அம்பாள் அறம் வளர்த்த நாயகியாக எழுந்தருளியிருப்பதும், நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கிய சரபேஸ்வரர் வடிவத்தில் தனிக்கோயில் கொண்டு எழுந்தருளிய தலமாகிய திருபுவனம் அமைந்துள்ளது.  

ஸ்ரீஅறம்வளர்த்தநாயகி சமேத ஸ்ரீகம்பஹரேஸ்வர சுவாமி மற்றும் ஸ்ரீசரபேஸ்வரசுவாமி திருக்கோவில் – மகா கும்பாபிஷேகப் பெருவிழா வரும் 2-02-24 தை மாதம் 19ம் தேதி வெள்ளிக்கிழமை 
காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இவ்விழாவினை முன்னிட்டு சாந்தி ஹோமம், திசா ஹோமம், பிரவேச பலி, ரக்ஷோக்ன ஹோமம், சுவாமி அம்பாள் சர்பர் விமானங்களுக்கு கலசம் பதித்தல் ஆகியவை தருமையாதீன திருப்பணி வேந்தர் ஸ்ரீலஸ்ரீகயிலை குருமகாசந்நிதானம் திருமுன்னர் நடைபெற்று வருகிறது.  

இந்தக் கோயில் கும்பாகோணத்தில் இருந்து மயிலாடுதுறை வழியாக செல்லும் பேருந்து மார்க்கத்தில் திருபுவனம் அமைந்துள்ளது.  

 

Exit mobile version