Sunday, March 22, 2026
HomeUncategorizedஸ்டார்ட் ... ஆக்ஷன்... அத்தியாயம் – 14.. இயக்குனர்கள் கிருஷ்ணன் - பஞ்சு..

ஸ்டார்ட் … ஆக்ஷன்… அத்தியாயம் – 14.. இயக்குனர்கள் கிருஷ்ணன் – பஞ்சு..

ஸ்டார்ட் … ஆக் ஷன்…

அத்தியாயம் – 14.

இயக்குனர்கள் கிருஷ்ணன் – பஞ்சு.

தமிழ் திரை உலகையும் … தமிழக அரசியலையும் … தமிழக மக்களையும் பெரிய அதிர்ச்சிக்கு ஆளாக்கிய அந்த சம்பவம்..

1967 ஆம் வருடம் … ஜனவரி … 12ஆம் நாள்..மதியம் …திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் இல்லத்தில் … அவரை திரு.எம்.ஆர் ராதா.அவர்கள் துப்பாக்கியால் சுட்டார்!. தன்னையும் சுட்டுக் கொண்டார்! இருவரும் அபாயகரமான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருவருமே உயிர் பிழைத்தார்கள்..! திரு.எம்.ஜி.ஆர் அவர்களுக்கு தொண்டையில் அடிபட்டு அவர் வாழ் நாள் முழுவதும் சரி வர பேச முடியாத நிலை உருவானது !.. திரு.எம்.ஆர்.ராதா அவர்களுக்கு சிறை தண்டனை தரப்பட்டு அவருடைய திரைப் பட வாழ்க்கையிலும் ஒரு பெரிய தேக்கம் உருவானது!..

தங்கள்.. கலை வாழ்வில்.. மறக்க முடியாத படங்களை இயக்க துணை நின்ற.. இரு கலை மேதைகளும்.. இரு துருவங்களாய்… மாறியதையும்.. இருவரின் வாழ்க்கையும்.. நிலை மாறிப் போனதையும் கண்டு.. கலங்கிப் போனார்கள்.. திரு.கிருஷ்ணன்.. பஞ்சு.. அவர்கள்..

ஆனால்.. விதியின் இந்த வினோத விபரீத.. விளையாட்டு திரும்பவும்.. அவர்கள்.. இயக்கிய வேறொரு படத்திலும் தொடர்ந்தது..

இயக்குனர்கள் திரு. கிருஷ்ணன் -பஞ்சு அவர்கள்..1972 வாக்கில் இயக்கிய இரண்டு முக்கியமான படங்கள்..

திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த ‘இதய வீணை’ மற்றும் தமிழக முதல்வர் கலைஞர் மு கருணாநிதியின் மகன். திரு. மு.க.முத்து அவர்கள் கதாநாயகனாக   நடித்த ‘பிள்ளையோ பிள்ளை!..’

தனக்குப் போட்டியாக.. திரையுலகிலும்.. தி.மு.க.விலும்… தன்னைப் பலவீனப் படுத்த..திரு.மு. கருணாநிதி அவர்கள்… திரு.மு.க. முத்துவை.. கதாநாயகனாக உருவாக்குகிறார்.. என்ற எண்ணம்.. திரு.எம்.ஜி. ஆர். அவர்களுக்கு ஏற்பட்டது.. இயக்குனர்கள்  திரு.கிருஷ்ணன்-பஞ்சு அவர்களுக்கு இரு தலைக் கொள்ளி எறும்பு நிலைமை!..

எந்தப் படத்திலிருந்து.. விலகுவது?

பராசக்தி  படத்துக்கு கதை வசனம் எழுதி தங்கள் கலை வாழ்வில் மிகப் பெரிய வெற்றிக்கு வித்திட்ட.. கலைஞர்.மு.கருணாநிதி அவர்களின் மகன் நடிக்கும் படம் ஒரு புறம்!.. பெற்றால் தான் பிள்ளையா … எங்கள் தங்கம் … இதய வீணை.. என்று தங்கள் இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து படங்களை இயக்க வாய்ப்பு தந்து கொண்டிருக்கும் மக்கள் திலகத்தின் படம்.. மறுபுறம்..!

எந்தப் படத்தை தொடர்வது?..எந்த படத்தை கை விடுவது? என்ற குழப்பம்…!

ஆனால் இரு புறமும் எந்த படத்தில் இருந்தும் அவரை விலகச் சொல்லி யாரும் கட்டாயப் படுத்தாததால்… இரண்டு படங்களிலும் ஆத்ம சுத்தியோடு வேலை செய்து இரண்டு படங்களும் வெற்றி பெற பாடு பட்டார்கள்!

தங்கள் தொழிலுக்கு அவர்கள் துரோகம் செய்யவில்லை!

இரண்டு.. படங்களும்.. அவர்களுக்கு.. இரு.. கண்கள்.. போலத்தான்.. இருந்தன..!

ஆனால் …

திரு.எம்.ஜி.ஆர் அவர்கள்  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்குவதற்கு… பிள்ளையோ பிள்ளை ஒரு முக்கிய காரணியாக.. அமைந்தது…

இயக்குனர்கள் திரு.கிருஷ்ணன் -பஞ்சு அவர்கள்… பல அற்புதமான அரசியல் கலப்பு வெற்றி படங்களை தந்து இருக்கிறார்கள்! அவைகளோடு குடும்பப் பங்கான  முத்தான படங்களையும் இயக்கி இருக்கிறார்கள்..

தெய்வப் பிறவி.. குலதெய்வம்.. புதையல்…அன்னை… 

குழந்தையும்  தெய்வமும்.. மோட்டார் சுந்தரம் பிள்ளை… உயர்ந்த மனிதன்.. எங்கள் தங்கம் என்று பட்டியலிட்டுக் கொண்டே இருக்கலாம்!..

தேர்ந்த கதை அறிவு..!. படத் தொகுப்பு திறன்..! தமிழக மக்களின் ரசனையைப் பற்றிய..சரியான கணிப்பு..! புரட்சிகரமான அரசியல் கருத்துக்களையும் ஆணியடித்தது போல காட்டிய துணிச்சல்..! இவையெல்லாம்.. திரு கிருஷ்ணன் பஞ்சு அவர்களின் பலம்!..

அதனால் தான் 1944 இல் தொடங்கி 1980 முடிய அவர்களால் படங்களை இயக்க முடிந்தது!.. 

அவர்களுக்கு கலைமாமணி விருதும் வழங்கப்பட்டது !..

சமூக நீதிகளையும் குடும்ப உறவுகளையும் ஆழமாக பிரதிபலித்த அவர்களது படங்கள்.. தமிழ்த் திரைப் படங்களின் சிறப்புப் பட்டியலில்  என்றென்றும்  இருக்கும் என்பதில் ஐயமில்லை!..

– இயக்குநர் நித்தியானந்தம்

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments