Home கிளாசிக் ஸ்டார்ட்.. ஆக்ஷன். அத்தியாயம். 33. வீணை எஸ். பாலச்சந்தர்- சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட்.. ஆக்ஷன். அத்தியாயம். 33. வீணை எஸ். பாலச்சந்தர்- சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட்.. ஆக்ஷன்.

அத்தியாயம். 33.

வீணை எஸ். பாலச்சந்தர்.

பெயரிலேயே இசையைப் பரப்பிய.. இசையமைப்பாளர். பாடல்களே..இல்லாத திரைப்படத்தை இயக்கி சரித்திரம் படைத்தவர்!.. 

Noir Thriller.. என்கின்ற நவீன கால திரில்லர் படங்களுக்கு … தமிழில் இலக்கணம் வகுத்தவர்…

திரைப் படத் துறையிலும் … இசைத் துறையிலும் … புரட்சிகளையும் …. விவாதங்களையும் …. உருவாக்கியவர்! பத்மபூஷன் விருது பெற்றவர்! இத்தனை சாதனைகளையும் செய்தவர்.. வீணை .எஸ் . பாலச்சந்தர் அவர்கள்!

பாரம் பரியமிக்க கலை குடும்பத்தில் பிறந்தவர் !

பிறந்த வருடம் 1927! அப்பா சுந்தரம் ஐயர்.. அம்மா பார்வதி என்கின்ற செல்லம்மா..

1934 லேயே குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர்!

‘சீதா கல்யாணம்’ என்ற படத்தில் அவரது பல குடும்ப உறவுகளும் நடித்திருந்தார்கள்! அவரது அப்பா சுந்தரம் ஐயர் ஜனகர் வேஷத்திலும் அண்ணன் ராஜம் ராமராகவும். அக்கா ஜெயலட்சுமி சீதா வேஷத்திலும்.. நடித்திருந்தார்கள் !

அவர்கள் தந்த ஊக்கம் எஸ். பாலச்சந்தர் அவர்களைத் தொடர்ந்து நடிக்க வைத்தது!

அவர் ஒரு நடிகராக உருவானார்!

1948-ல் ‘என் கணவன்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்! அதிலிருந்து தொடர்ச்சியாக பல படங்கள் !.. நடிகராக … இயக்குனராக … இசை அமைப்பாளராக … வலம்.. வந்தார்!.. வழக்கமான குடும்ப..சரித்திர … புராணப் படங்களைத் தாண்டி வித்தியாசமான மர்ம கதைக் களங்களைத் தேர்ந்தெடுத்து மேல் நாட்டுப் படங்களின் பாணியில் படமாக்கி ஒரு Trend – Setter ஆக.. விளங்கினார்!

1954 இல்  அவர் இயக்கிய படம் 

‘அந்த நாள்’.. ஏ. வி. எம். தயாரித்த புதுமைப் படைப்பு..

இந்தியத் திரைப் படங்களில் பாடல்கள் கோலோச்சிய கால கட்டத்தில் முதல் முறையாக பாடல்களே இல்லாத ‘அந்த நாள்’ திரைப் படத்தை இயக்கினார்! அந்தப் படத்தின் கதைக் களமும் முழுக்க வித்தியாசமான ஒன்று!.. கதாநாயகனாக சிவாஜி கணேசன் அவர்கள் நடித்திருந்தார்! 

அவர் முதல் காட்சியிலேயே சுடப்பட்டு இறந்து விடுவார்!

அவரை யார் கொன்றார் என்பதுதான் முழு படம்!

அதில் வரும் சில முக்கிய கதாபாத்திரங்கள் நடந்தவைகளைக சொல்லும்.. Flash – Back உத்தியில்.. படம்.. நகரும்.. நடந்த சம்பவத்தை அவரவர்.. வேறு.. வேறு.. ஆங்கிளில் … கண்ணோட்டத்தில் சொல்வார்கள்! முடிவில் மனைவியே கணவனை கொலை செய்திருக்கும் திடுக்கிடும் திருப்பம் படத்தில் வரும்!

அக்கிரா குருஷோவா என்ற உலக சிறந்த இயக்குனரின் ‘ரோஷமான்’ படத்தின் பாதிப்பில்  எஸ்.பாலச்சந்தர் அவர்கள் இயக்கிய படம் ‘ அந்த நாள்’ சிவாஜி கணேசன் அவர்களும்  தேசத்துக்கே துரோகம் செய்யும்  கதா பாத்திரத்தில் நடித்திருந்தார்! தன் கணவனையே சுட்டு தேசத்தை காக்கும் புரட்சிகரமான மனைவியாக பண்டரி பாய் அவர்கள் நடித்தார் !

இந்தப் படத்தில் லைட்டிங் ஒளிப்பதிவு.. படத்தின் மர்மத்துக்கு மெருகூட்டியது!.. கேமரா கோணங்கள் …கேமரா மூவ்மெண்ட்ஸ் … எல்லாமே புதுமையாக இருந்தன !

அதிலும் சப்ஜெக்ட்டிவ் ஷாட் (subjective shot ) என்று சொல்லப்படும் கதா பாத்திரமாக கேமரா நகரும் யுக்தி பிரமாதமாக கையாளப் பட்டிருந்தது!

ஆடும்.. நாற்காலியில்  அமர்ந்து கொண்டு கதாபாத்திரம் ஆடிக் கொண்டே பேசுவதில் கேமரா வே நாற்காலியில்  அமர்ந்து  ஆடும்.. Shot.. ஒரு.. master – Piece..

அற்புதமான Takings மூலமாகவும் வித்யாசப்பட்ட படம்!

‘அந்த நாள்’ படத்துக்கு 1954 ஆம் வருட சிறப்பு தமிழ் பட சான்றிதழ் கிடைத்தது!

1962 இல் அவர் நடித்து.. இசையமைத்து  இயக்கிய  இன்னொரு படமும் வித்தியாசமான திகில் சாதனையை செய்தது!..

அந்தப் படம்?

– இயக்குநர் நித்தியானந்தம்

Exit mobile version