Home Uncategorized ஸ்டார்ட் ஆக்ஷன்- அத்தியாயம்- 4

ஸ்டார்ட் ஆக்ஷன்- அத்தியாயம்- 4

ஸ்டார்ட் ஆக் ஷன்
அத்தியாயம் – 4

எல்லிஸ்.ஆர். டங்கன்
அவரது இயக்கத்தில் சரித்திர சாதனைப் படைத்த திரைப் படம்…

Ellis .R.Dungan..

ஏழிசை வேந்தர்..M.K.தியாகராஜ பாகவதர் நடித்த அம்பிகாபதி திரைப் படம்!

1937ல் வெளி வந்தது..

எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்களை முதல் சூப்பர் ஸ்டார்  என்கிற அளவுக்கு உயர்த்திய படம் !..  52 வாரங்களுக்கும் குறையாமல் ஓடிய படம்! பட்டி தொட்டி எங்கும் பாடல்கள் ஓயாமல் ஒலித்த படம்!

ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட்  தந்த பாதிப்பில் … அதில் உள்ள சில காட்சிகளை எல்லாம் எடுத்து தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து மிக நெருக்கமான கவித்துவமான காதல் காட்சிகளை எல்லிஸ் டங்கன் படமாக்கினார்….!

காதலி உப்பரிகை மேலிருக்க.. காதலன் கீழே நின்று.. காதலைப் பரிமாறிக் கொள்ளும் ஷேக்ஸ்பியரின் காட்சி வடிவங்களை.. எல்லிஸ் டங்கன்  இந்தப் படத்திற்கு பயன்படுத்தினார்!

‘Let sleep embrace your eyes..’ போன்ற வரிகள்.. தமிழில்.. ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டும்.’. என தமிழ் பேசியது..
அதுவரை வந்த தமிழ்ப்  படங்களில் வசனங்கள் …. சமஸ்கிருதம் கலந்து தான் இருந்தது… முதன்.. முதலாக … தூய தமிழில்.. வசனங்கள்.. ஒலித்த படம்.. அம்பிகாபதி..!

பாபநாசம் சிவன் பாடல்களை எழுதி.. இசையமைத்திருந்தார்..! தமிழில் முதல் முறையாக இசை இயக்குனரின் பெயருக்கு.. Credit கொடுத்த முதல்.. படம்.. அம்பிகாபதி..!

முதல்.. முறையாக.. முத்தக் காட்சி இடம் பெற்றது.. நெருக்கமான காதல்.. காட்சிகள்.. காதலன்.. காதலியைப் பார்த்து.. கண்ணடிப்பது.. கட்டிலில் தூக்கி இடத்தில்.. போன்ற.. அந்த நாளைய அளவு கோலை மீறிய.. படம் அம்பிகாபதி!

சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய வெற்றிப் பட வரிசையில்.. முக்கியமான படம்..
M.S. சுப்புலட்சுமி மீரா.. படம்.. எல்லிஸ் டங்களின் இயக்கத்திற்கு மற்றுமொரு இசை வைர மாலை!..

பாரதிதாசன் அவர்களின் எதிர்பாராத முத்தம் நாவலை.. பொன்முடி என்ற பெயரில்.. 1950 ல் எல்லிஸ் டங்கன் இயக்கினார்..
சேலம்.. மாடர்ன் தியேட்டர்ஸ் T.R. சுந்தரம் அவர்கள் தயாரித்த படம்..

முழுக்க.. சேலத்திலும்.. ஏற்காட்டிலும் எடுக்கப்பட்ட படம்..!

அடையாறு பீச்சிலிருந்துமணல் எடுத்து செல்லப் பட்டு.. கடற்கரை செட் போடப்பட்டு.. காட்சிகள் எடுக்கப் பட்டது..
நரசிம்ம  பாரதி – மாதுரிதேவி நடித்திருந்தார்கள்…
படம்.. ஆபாசமாக இருக்கிறது.. அமெரிக்க படங்களின் பாணியில்.. கலாச்சாரத்தை மீறி.. எல்லிஸ்..டங்கன் படமெடுக்கிறார் என்ற விமர்சனத்தையும் பெற்ற படம் பொன்முடி!.

அவர் தமிழில் கடைசியாக மந்திரிகுமாரி படத்தை 1950 ல் இயக்கினார்.
ஐம் பெருங் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியை தழுவி.. கலைஞர். கருணாநிதி அவர்கள் எழுதிய.. மேடை நாடகம்.. மந்திரிகுமாரி… 

அந்த நாடகத்தை..அதே பெயரில்.. மாடர்ன் தியேட்டர்ஸ் T.R. சுந்தரம் அவர்கள் தயாரித்தார்…

கலைஞர் கருணாநிதி அவர்கள் திரைக்கதை வசனம் எழுதினார்..
எல்லிஸ் டங்கனின் படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்த திரு.எம்.ஜி.ஆர். அவர்கள்.. ஹீரோவாக நடித்தார்..
நம்பியார். மாதுரிதேவி, S.A. நடராஜன். நடித்திருந்தார்கள்..

மாதுரிதேவியின் கதாபாத்திரம்.. ஒரு புதிய அதிர்வையே உருவாக்கியது..
தவறு செய்த கணவனை … திருத்த முயன்று.. முடியாமல்.. தன் கையாலேயே கொல்லும்.. புரட்சிப் பெண்.. பாத்திரத்தை சிறப்பாக கையாண்டிருந்தார் மாதுரிதேவி..
கலைஞர் கருணாநிதியின் வசனம்.. படத்துக்கு மகுடம்.. சேர்த்தது..!

எல்லிஸ் டங்கன் இயக்கிய பல படங்களில் இந்து மத காட்சிகளை கோயிலில் எடுக்க வேண்டிய சூழல்!.. இந்துக்கள் அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய முடியாது என்ற நிலைமையில்.. தன்னை காஷ்மீர் பண்டிட் என்று சொல்லிக் கொண்டு  கோவிலுக்குள் சென்று படம் எடுத்திருக்கிறார்.. எல்லிஸ் டங்கன்.!

திரைப்படங்களுக்கு மொழி அறிவு என்பது அத்தியாவசியமான ஒன்று இல்லை என்பதை தான் இயக்கிய படங்கள் மூலமாக நிரூபித்துக் காட்டியவர் எல்லிஸ் டங்கன்!

Film itself is a language என்பதை உண்மையாக்கியவர்….!

1950 க்கு பிறகு அவர் அமெரிக்கா சென்று  செட்டில் ஆனார்! 

Ellis  Dungan Production என்ற நிறுவனத்தை துவக்கி.. டாக்கு மென்டரி படங்களை இயக்கினார்..!.T.V. சீரியல்களை இயக்கினார்..!

 92 வயதில்  மறைந்தார்!

2013 இல் கரன் பிலால் என்பவர் 
An American in Madras.. என்ற பெயரில் எல்லீஸ்  டங்கனின்  வாழ்க்கை வரலாற்றை ஆவணப் படமாக எடுத்தார்! அது அந்த மிகப் பெரிய திரைக் கலைஞனுக்கு காட்டிய  மரியாதை பெட்டகமாக அமைந்தது. 

எல்லீஸ் .ஆர். டங்கன் அவர்களின் கால எல்லை தாண்டி அவரை என்றென்றும் வாழ வைத்துக் கொண்டிருக்கும்.!!

– இயக்குநர் நித்தியானந்தம்.

Exit mobile version