Skip to main content

ஸ்டார்ட் ...ஆக்ஷன் அத்தியாயம்- 55. இயக்குனர். மகேந்திரன்- சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட் ...ஆக்ஷன்

அத்தியாயம்- 55.

இயக்குனர். மகேந்திரன்.

ஆடியோ விஷுவல் மீடியமாக வலம் வந்து கொண்டிருந்த தமிழ் திரைப் பட உலகத்தை முழுக்க முழுக்க விஷுவல் மீடியத்துக்கு மாற்றிய பெருமைக்குரிய இயக்குனர் மகேந்திரன் அவர்கள்! மிகக் குறைந்த வசனங்கள் !.. மென்மையான.. தணிந்த குரல்களில் தங்கள் அழுத்தமான உணர்வுகளை வெளிப்படுத்தி மெலோ டிராமா இல்லாமல் திரையில் வாழ்ந்த கதா பாத்திரங்கள் ... என புது திரை இலக்கணங்களை வலுவாக கட்டமைத்தவர் மகேந்திரன் அவர்கள்!

1939 இல் பிறந்தார் இயற் பெயர்  J.அலெக்சாண்டர்!

அம்மா ஆசிரியராக பணி புரிந்தவர்!.

மகேந்திரன் அவர்கள் நல்ல மாணவராக வளர்ந்தார்!..

மதுரையில் அழகப்பா கலைக் கல்லூரியில் படிக்கும் காலத்தில் சிறந்த மேடைப் பேச்சாளராக விளங்கினார்!

அங்கு ஒரு விழாவில் கலந்து கொள்ள வந்த எம்.ஜி.ஆர் அவர்கள் முன் தமிழ் திரைப் பட உலகத்தில் இருந்து வரும் தவறான வியாபார அணுகு முறைகளை விமர்சித்து மிக காரசாரமாகப் பேசினார்!

எம்.ஜி.ஆர் அவர்கள் அதற்காக வருத்தம் கொள்ளாமல் அவரது கருத்துக்களை பாராட்டினார்! அவர் ஒரு சிறந்த திரைப்பட விமர்சகராக வருவார் என்று வாழ்த்தினார்!

பின்னர் சட்டக் கல்லூரியில்  படிக்க சென்னை வந்த மகேந்திரன் அவர்கள்

சூழ் நிலை காரணமாக படிப்பை தொடர முடியாமல் திரும்பவும் எம்.ஜி.ஆர் அவர்களை சந்தித்தார்! அந்த சந்திப்பு அவரது வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது!

கல்லூரி மேடையில் திரைப் படங்களைப் பற்றி ஆழமாக பேசிய மகேந்திரன் பேச்சுக்கள் எம்.ஜி.ஆர் அவர்களின் மனதில் நங்கூரமாய் இருந்தன....! அதனால் அவரை கல்கி அவர்கள்.. எழுதியிருந்த பொன்னியின் செல்வன் நாவலை.. தான் நடிக்கும்  படத்துக்கு ஏற்றவாறு  திரைக் கதை எழுத பணித்தார்!

ஆனால் சில சூழல்களால் அது நடக்கவில்லை.... மகேந்திரன் அவர்களை தன்னுடைய நாடக குழுவுக்கு நாடகம் எழுதித்  தர வைத்தார்!

அதற்குப் பிறகு காஞ்சித் தலைவன் என்ற படத்தில் அவரை உதவியாளராக சேர்த்து விட்டார்!

அன்றிலிருந்து துவங்கிய மகேந்திரன் அவர்களின் பயணம் அவரை ஒரு திரைக் கதை ஆசிரியராக உருவாக்கியது!

நாம் மூவர்என்ற படத்திற்கு திரைக் கதை எழுதினார்!

அந்தப் படம் வெற்றி பெற்றது! தொடர்ந்து பல படங்களுக்கு கதை வசனம் எழுதினார்

நடிகர் செந்தாமரை அவர்களின் நாடக மன்றத்திற்கு தங்கப் பதக்கம் என்ற நாடகத்தை எழுதினார்!..

அந்த நாடகத்தைப் பார்த்த சிவாஜி கணேசன் அவர்கள்  அவரது நாடக மன்றத்துக்காக  நாடகமாக நடித்தார்!. படமாகவும்.. உருவாக்கினார்!

சிவாஜி கணேசன் அவர்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு மகுடமாக தங்கப் பதக்கம் அமைந்தது!

காலம் எழுத்தாளர் மகேந்திரன் அவர்களை இயக்குனர் ஆக மாற்றும் சூழல் உருவானது ! அவரை இயக்குனராக்க ஆனந்தி ஃபிலிம்ஸ் நிறுவனம் முடிவெடுத்தது!

மகேந்திரன் அவர்கள் அதற்காக தேர்ந்தெடுத்த கதை....

எழுத்தாளர்.உமா சந்திரன் அவர்கள் கல்கியில்  எழுதி வந்த முள்ளும் மலரும் என்ற தொடர் கதை தான்!

அந்த தொடர் கதையின் சில அத்தியாயங்களை படித்ததும்.. மகேந்திரன் அவர்கள்  தன் கற்பனையில்  வேறு காட்சிகளை உருவாக்கி.. திரைக் கதையை டெவலப் செய்தார்!

ஒரு வசனகர்த்தாவாக திரைப்பட உலகில் வலம் வந்த மகேந்திரன் அவர்கள் இயக்குநராக மாறியதும் செய்த முதல் மாற்றம் .... அதுவே அவரை விசுவல் மீடியாவின் குரு என்கின்ற வகையில் உருவாக்கியது!

அந்த மாற்றம்?

(தொடரும்)

- இயக்குநர் நித்தியானந்தம்