Home Uncategorized ஸ்டார்ட் ஆக்ஷன் அத்தியாயம். 9- இயக்குநர் எம்.ஜி.ஆர் -சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட் ஆக்ஷன் அத்தியாயம். 9- இயக்குநர் எம்.ஜி.ஆர் -சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட் ஆக் ஷன்

அத்தியாயம். 9.

இயக்குநர் எம்.ஜி.ஆர்.

நாடோடி மன்னன்.. வெளியாகும் நேரம்.. ரூபாய் 50000 கட்டினால் தான்.. ரிலீஸ் பிரிண்டுகள் …  லேபிலிருந்து கிடைக்கும் என்ற சூழல் எழுந்தது!…

தயாரிப்பு செலவுகள் கூடிப் போனதால் திரு.எம்.ஜி.ஆர் அவர்களிடம் பணம் இல்லை..!

அப்போது.. A.V.மெய்யப்ப செட்டியார்.. அவர்கள் … படத்தின்  இலங்கை ரிலீசை.. அடமானமாகப் பிடித்துக் கொண்டு ரூபாய்.. ஐம்பதாயிரத்தை கடனாக கொடுத்தார்…!

படம்.. வெளி வந்தது…!

திரையிடப் பட்ட சில நாட்களிலேயே.. அந்தக் கடனை திரு. எம்.ஜி. ஆர். அவர்கள்.. அடைத்து விட்டார்!

நாடோடி மன்னன் திரைப்படம் 1958. ஆகஸ்ட் 22ந் தேதி…. திரையரங்குகளில் ராஜ நடை போடத் துவங்கியது!..

பல சாதனைகளை உருவாக்கியது..!

18 இலட்சங்களில் எடுக்கப் பட்ட படம்..

    • கோடியை வசூலித்தது..!

தமிழில் ஒரு கோடியை தாண்டி வசூல் சாதனை செய்த படம்… 

1956 -ல் … திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்து வெளி வந்த மதுரை வீரன் திரைப்படம்!..

அந்த சாதனையைத் தொடர்ந்து நாடோடி மன்னன் ஒரு கோடிக்கு மேல் வசூல் செய்தது!

திரையிட்ட அரங்கங்களில்  175 நாட்கள்  படம் ஓடியது!..

படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன!

திராவிட முன்னேற்ற கழகத்தின் அரசியல் சித்தாந்தங்கள் …. கம்யூனிச கோட் பாடுகள் … ஏழை பாழைகளின் வாழ்வியல் இன்னல்கள் … பிரச்னைகள்.. இவைகளை எல்லாம்  பாடல் வரிகளாக ஒலித்து.. சாகாவரம் பெற்றன !..

திரு.பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் எழுதிய பாடலில் அவர் நிறைய கம்யூனிச கருத்துக்களை உள்ளடக்கி எழுதியிருந்தார்! 

திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் அதில் எந்தத் தடையும்… சொல்லவில்லை ….! அதே நேரத்தில் அந்தப் பாடல்களில் முழுக்க எதிர் மறை எண்ணங்கள் மட்டுமில்லாமல் … நேர்மறை எண்ணங்களும் வரும் வகையில் படம் பிடித்தார்!..

‘காடு விளைஞ்சென்ன மச்சான் ? நமக்கு கையும் காலும் தானே மிச்சம்? ‘ என்று நாயகி.. ஒரு ஏழை விவசாயியின் அவல நிலையை எதிர் மறை உணர்வில்  பாட..

‘காடு வெளையட்டும் பொண்ணே.. நமக்கு காலம் இருக்குது.. பின்னே …! பட்ட துயர் இனி மாறும்… கிட்ட நெருங்குது நேரம்..’என நாயகன்.. நேர் மறை உணர்வில் பாடுவது.. போல.. பாடல் வடிவமைக்கப்பட்டது!..

வசனங்களிலும்.. அரசியல்.. கோட்பாடுகள்.. திராவிடக் கருத்துக்கள் நிறைந்திருந்தன..!

திராவிட முன்னேற்ற கழகத்தின் பிரச்சார படமாகவே நாடோடி மன்னன்.. கருதப்பட்டது..!

தன் எம்.ஜி.ஆர்.. பிக்சர்ஸ்.. பேனரிலேயே திராவிட முன்னேற்ற கழகத்தின் கறுப்பு.. சிவப்புக் கொடியைப் பறக்கவிட்டார்.. திரு.எம்.ஜி.ஆர்.. அவர்கள்!

நாடோடி மன்னன் உருவாக்கிய அரசியல் தாக்கம்.. ஒரு பக்கம்.. இருந்தாலும்..

திரைப்படம்.. வியாபார.. ரீதியான.. ஜனரஞ்சகப் படம்.. என்ற பாராட்டைப் பெற்றது!

Technically Superior ..என்ற புகழ் கிடைத்தது..!

ஒரு இயக்குனராக.. திரு.எம்.ஜி.ஆர். அவர்களின்  யுக்திகள்.. பிரமிக்க வைத்தன..!

 ‘வேதனை அதிகமானால்.. தலையின் இருபுறமும் சம்மட்டியால் அடிப்பது போலிருக்கிறது..’ என்ற … கருத்தை.. symbolic ஆக.. இரு சம்மட்டியால்…. தலையில்.. அடிப்பது.. போல.. காட்சி படுத்தியிருப்பார்.. திரு.எம்.ஜி.ஆர்.. அவர்கள்!

Double action mask shots எல்லாமே.. அற்புதமாக இருக்கும்.. அதிலும்.. ஒரு எம்ஜிஆர். வாளை தூக்கி வீச.. அந்த வாளை.. Follow செய்தபடி Pan ஆகும்.. கேமரா.. மறுபுறம்.. இன்னொரு எம்.ஜி.ஆர்.. அந்த வாளை கையால்.. பிடிப்பதை.. துல்லியமாக.. ஒரே Shot போல காட்டும்..!

கன்னித் தீவு.. அரங்க அமைப்புகளும்..

Under water பாடல் காட்சிகளும்.. பிரமிப்பாக இருக்கும்..!

திரு.எம்.ஜி.ஆர் முழு அரசியல்வாதி யாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட படம்.. நாடோடி மன்னன்..!

பேரறிஞர்.. அண்ணா.. திரு.எம்.ஜி.ஆர்.. அவர்களுக்கு  இதயக் கனி என பட்டயம்..

தந்தார்.!..50 கிலோ.. தங்க வாள் ஒன்றும்.. பரிசளித்தார்..! அந்த வாளை.. பின்னாளில் தாய் மூகாம்பிகை கோயிலுக்கு திரு.எம்.ஜி.ஆர். அவர்கள் தந்து விட்டார்..!

திரையுலகின் முடி சூடா.. மன்னனாக வலம்.. வந்தார்..!

நிஜத்திலேயே அவர் முடி.. சூடி … தமிழகத்தை ஆள.. நாடோடி மன்னன் படம்தான்.. அடித்தளம் இட்டது.. !

நாடோடி மன்னன் படத்திற்குப் பிறகு.. அவர்.. வெகு காலம்.. எந்தப் படத்தையும் இயக்கவில்லை..!

ஆனால்.. தமிழ்த் திரையுலக விதிப் பயன்.. அவர் திரும்பவும்.. இயக்குனாராக படமெடுக்கும்.. சூழ்நிலையை உருவாக்கியது.!

புரட்சி நடிகராக வலம்.. வந்த.. அவர்..

புரட்சித் தலைவராக மாறி…

நாற்பதாண்டு கால நட்பையும்.. மீறி..

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்.. என்ற கட்சியை நிறுவி… தன்னை.. திரைத் துறையிலும்.. அரசியலிலும்.. நிலை நிறுத்திக் கொள்ள.. அவர்.. போராடிய கால கட்டத்தில் .. அவர்.. இயக்கிய மற்றொரு.. சாதனைப் படம்தான்..

‘உலகம் சுற்றும்.. வாலிபன்’…

1973 ல் வெளியான அந்தப்  படத்தில்.. திரு.எம்.ஜி. ஆர். அவர்கள் சந்தித்த சோதனைகள்..

பலப் பல..!

என்ன அவை?

(தொடரும்)

– இயக்குநர் நித்தியானந்தம்

Exit mobile version