எல்லிஸ்.ஆர்.டங்கன்.
Ellis .R.Dungan..
திரை கடலோடி திரவியம் தேடு..
இது பழமொழி..
அதை வாழ்ந்து காட்டியவர் பலர்..
எல்லிஸ்.ஆர்.டங்கன்.
இவர்.. திரை கடலோடி திரைப் படம் எடுக்க வந்தவர்.. வென்றவர்..
1909 ல் இவர் பிறந்தது.. அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் … உள்ள பார்டனில் !
பட்டதாரியானது தெற்கு கலிபோர்னியாவில் …!

Hollywood படங்களில் பணியாற்றி படம் எடுப்பது.. பற்றிய ஆழமான அறிவையும் அனுபவத்தையும் சேர்த்துக் கொண்டு
பிழைப்பு தேடி வந்தது.. பம்பாய்!
சந்தித்தது.. தெற்கு கலிபோர்னியாவில் உடன் பயின்ற மாணவர்.. மணிக்லால்.. டண்டனை..!
மணிக்லாலின் பெற்றோர் திரைப்பட துறையில் செயல் பட முடிவு செய்திருந்த நேரம்!..
மணிக்லாலுக்கு இயக்குனராக விருப்பம்..!
எல்லிஸ் டங்கனை தன்னோடு இணைத்து செயல் பட மணிக் லால்.. திட்டமிட்டிருந்தார்..!
பம்பாயில் அது நிகழவில்லை!

நந்தனார் தமிழ் படத்தை கல்கத்தாவில் இயக்கும் வாய்ப்பு மணிக்லாலுக்கு கிடைத்தது..!
அதே நேரம்… திரு.மருதாசலம் செட்டியார் சதிலீலாவதி என்ற படத்தை தமிழில் தயாரிக்க.. முடிவு செய்தார்.. மணிக்லாலை இயக்குனராக்க விரும்பினார். மணிக்லாலோ நந்தனார் படத்தை இயக்கிக் கொண்டிருந்ததால்.. தனது நண்பர்.. எல்லிஸ் டங்கனுக்கு இயக்க வாய்ப்பு தரும்படி மருதாசலம் செட்டியாரிடம் சிபாரிசு செய்தார்… அவரும் சம்மதித்தார்… எல்லிஸ் டங்கன் சதி லீலாவதி படத்தின் இயக்குனர் ஆனார்..!
உயிர்த் தோழன் வாங்கித் தந்த நல்ல சந்தர்ப்பத்தை … நேர்த்தியாகப் பயன்படுத்தி தமிழ்த் திரைப்பட உலகில்.. ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக.. பல ஆண்டுகள்.. வலம் வந்தார்.. பல வெற்றிப் படங்கள்.. பல கலைஞர்களை புகழ் உச்சிக்கு கொண்டு போனார்..!
அவர் இயக்கிய சதி லீலாவதி படம்….
1936 ல் வெளிவந்தது..
பல வரலாற்று நிகழ்வுகள் அதில் பிறந்தது..!
மக்கள் திலகம்.. எம் ஜி ஆர். அவர்களின் முதல் படம்.
T.S. பாலையாவிற்கு முதல் படம்.
கலைவாணர் .N.S. கிருஷ்ணன். அவர்கள் முதலில் நடித்தது இந்தப் படத்தில்தான்..
டணால் தங்க வேலுவுக்கு முதல் படம்…
திரை மேதை S.S. வாசனுக்கு கதாசிரியராக முதல் படம்..
பதிபக்தி என்ற நாடகம் சென்னை கந்தசாமி முதலியாரால் எழுதப்பட்டு மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியினரால் நடத்தப்பட்டு வந்தது!
மருதாசலம் செட்டியார் அந்த நாடகத்தைப் படமாக்க நினைத்தார்..
ஆனால் பதிபக்தி வேறொரு நிறுவனத்தால் படமாக்கப்படுவதை அறிந்த மருதாச்சலம் கந்தசாமி முதலியாரிடம் ஆலோசிக்க.. அவர்
பதி பக்தியின் சாயலிலேயே … சதி லீலாவதி என்கின்ற கதையை எஸ் எஸ் வாசன் ஆனந்த விகடனில் தொடர்கதையாக எழுதி இருக்கிறார் அதன் உரிமையை வாங்கி படமாக்கலாம் …. என்று யோசனை தந்தார்! எஸ் எஸ் வாசனும் அரை மனதாய் சம்மதித்தார்.. !

அந்த காலகட்டத்தில் 200 ரூபாய்க்கு அந்த கதையின் உரிமையை கொடுத்தார்..!
கந்தசாமி முதலியார் திரைக்கதை வசனம் எழுதினார்..! கதையின் நாயகனாக முதலியாரின் மகன் எம்.கே .ராதா நடித்தார்…. தன் மகனை பதிபக்தி படத்திலேயே நடிக்க வைக்க வேண்டும் என்ற கந்தசாமி முதலியாரின் எண்ணம் சதி லீலாவதியில் நிறைவேறியது..
மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியை சார்ந்த பலர் நடித்தார்கள் … அதில் குறிப்பாக திரு.எம்.ஜி.ஆர். அவர்கள்.. பதிபக்தியில் அவருக்கு சரியான வேடத்தை கந்தசாமி முதலியாரால் யாரால் வாங்கித் தர முடியவில்லை…. அதற்கு பரிகாரமாக சதிலீலாவதியில் நடிக்க வைத்தார்..
திரு.எம்.ஜி. ஆர் அவர்களுக்கு.. வேறு இரு முக்கிய கதாபாத்திரங்கள் தருவதாக இருந்த நிலை மாறி கெட்ட போலீஸாக நடிக்க வேண்டிய சூழல்..!
திரு.எம்.ஜி ஆர் அவர்களுக்கு அந்த ரோல் பிடிக்கவில்லை.. !அவரது அம்மா வற்புறுத்தியே நடித்தார்..!
கலைவாணர்..என் எஸ் கிருஷ்ணன் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்..!அவர் வரும் காட்சிகளுக்கு அவரே திரைக்கதை வசனம் எழுதிக் கொண்டார்..!
இப்போது அடிக்கடி வெடிக்கும் கதைத் திருட்டு பிரச்னை சதி லீலாவதிக்கும் வந்தது..!
என்ன அது?
(தொடரும்) ..
– இயக்குநர் நித்தியானந்தம்.

