Thursday, July 9, 2026
Homeசெய்திகள்உங்களிடம் ₹2,000 நோட்டு உள்ளதா? மாற்றிக்கொள்ள இன்னும் வாய்ப்பு உள்ளது!

உங்களிடம் ₹2,000 நோட்டு உள்ளதா? மாற்றிக்கொள்ள இன்னும் வாய்ப்பு உள்ளது!

கடந்த 2023-ஆம் ஆண்டு ரூ.2,000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்திருந்த நிலையில், பொதுமக்கள் தங்களிடம் உள்ள அந்த நோட்டுகளைத் தற்போதும் மாற்றிக் கொள்ளலாம் என்று ஒரு முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது.

அதன்படி, ரூ.2,000 நோட்டுகள் தற்போதும் சட்டப்பூர்வமாக செல்லத்தக்கவை தான் என்று தெளிவுபடுத்தியுள்ள ஆர்பிஐ, பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் 19 மண்டல அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று தங்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைத்துக் கொள்ளலாம் அல்லது மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

மேலும், நேரில் வர இயலாதவர்கள் தபால் (Post) மூலமாகவும் இந்த நோட்டுகளை ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு அனுப்பி, தங்களின் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் அதற்கான தொகையை நேரடியாக வரவு வைத்துக் கொள்ளும் வசதியும் தற்போதும் நடைமுறையில் உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments