Home வணிகம் பங்குச்சந்தை கிடு கிடு உயர்வு!

பங்குச்சந்தை கிடு கிடு உயர்வு!

அமெரிக்காவின் இறக்குமதி வரிவிதிப்பால் இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டன. மேலும் வெளிநாட்டு முதலீடுகள் வெளியேற்றம், சர்வதேச அரசியல் மாற்றங்கள், போர் உள்ளிட்ட காரணங்களால் பங்குச் சந்தை முதலீடுகளில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்ட தயங்கினர். இதனிடையே ஜிஎஸ்டி வரி விதிப்பில் மிகப்பெரிய சீர்திருத்தம் கொண்டு வர உள்ளதாக மத்திய அரசு அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்பு பங்குச் சந்தை முதலீட்டில் நேற்று எதிரொலித்து வாரத்தின் தொடக்க நாளான நேற்று தொடங்கியது முதலே பங்குச்சந்தை வர்த்தகங்கள் தாறுமாறாக உயர்ந்து இறுதியில் ஏற்றத்துடன் முடிவடைந்தன.

 மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’ 679 புள்ளிகள், அதாவது 0.84 சதவீதம் உயர்ந்து 81,273 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் ‘நிப்டி’ 1 சதவீதம் உயர்ந்து 245 புள்ளிகள், அதாவது 24,876 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது.

Exit mobile version