Home செய்திகள் “நானும் படிக்க வரேன்”.. அரசு பள்ளிக்குள் நுழைந்த யானை குட்டி!

“நானும் படிக்க வரேன்”.. அரசு பள்ளிக்குள் நுழைந்த யானை குட்டி!

 கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரி தாலுக்கா சேக்காடி பகுதியில் வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் தடுக்கும் வகையில் அகழி அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது வயநாடு பகுதியில் தொடர் கனமழை பெய்வதால் அகழி மண் நிறைந்து காணப்படுகிறது.

 இந்நிலையில் பிறந்த 20 நாட்களான யானை குட்டி ஒன்று அகழியில் சிக்கி இருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் வனத்துறையினர் விரைந்து வந்து குட்டி யானையை மீட்டனர். இந்நிலையில் சேக்காடி அரசு தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் குட்டி யானை திடீரென நுழைந்தது.

 இதைக்கண்ட மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குட்டி யானை கட்டிடத்தின் வராண்டாவில் ஓடியவாறு இருந்தது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து வலை மூலம் குட்டி யானையை மடக்கி பிடித்து ஜீப்பில் ஏற்றினார். 

இதை அடுத்து தாய் யானையுடன் குட்டியை சேர்க்க திட்டமிட்டு தாயானையை தேடும் பணியில் வனத்துறை ஈடுபட்டு வந்தனர். அதன் பிறகு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வனத்துறையினர் குட்டி யானையை பிடித்து தாய் யானையுடன் சேர்த்தனர்.

Exit mobile version