2024 புதுகை கம்பன் கழகத்தின் “கம்பன் பெருவிழா” வில் 10 ஆம் நாள் (21/07/2024) நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியில் நடைபெற்ற “பட்டிமன்றம்” நிகழ்ச்சிக்கான முன்னுரையின்போது, நடுவராக பபங்கேற்ற “சொல்வேந்தர்” திரு.சுகி சிவம் அவர்கள் முன்னுரை ஆற்றினார்.
அப்போது அவர், “கம்ப நாடகம், கம்ப சித்திரம், கம்ப சூத்திரம் ” என்றெல்லாம் என்னவென்று தனித்தனியே விளக்கினார். மேலும் அவர் பேசும்போது, “பொதுவாகவே வயதில் முதிர்ந்தவர்கள் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படும்போது
தங்கள் குழந்தைகளால் தாங்கள் “மறக்கப்பட்டோம்
பெற்றோர்களான தாங்கள் தங்கள் குழந்தைகளை “துறந்து விட்டோம்” என எண்ணிக் கொள்ளுங்கள். அவ்வாறு எண்ணுவதால் மன அழுத்தம் உண்டாகாது.
வாழ்க்கையில் இது சகஜமாக நடைபெறக்கூடியதே. கவலை கொள்ள வேண்டாம்” எனக் கூறினார்.

