Saturday, April 25, 2026
Homeவானிலைசூப்பர் எல்-நினோ எச்சரிக்கை: 2027ல் கடும் வெப்பம் அபாயம்!

சூப்பர் எல்-நினோ எச்சரிக்கை: 2027ல் கடும் வெப்பம் அபாயம்!

பசிபிக் பெருங்கடல் பகுதியில் நிலவும் வெப்பநிலையில் ஏற்படும் அதீத மாற்றங்கள் காரணமாக, இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ‘சூப்பர் எல்-நினோ’ உருவாகக்கூடும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வழக்கமாக நிலவும் வெப்பநிலையை விட, கடல் நீரின் வெப்பநிலை 2.5° செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடிய இந்த அசாதாரண நிகழ்வு, உலகளாவிய பருவநிலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த வல்லது.

இந்த சூப்பர் எல்-நினோவின் தாக்கம் உலகம் முழுவதும் கடுமையாக உணரப்படும் என்றும், இதன் தொடர்ச்சியாக வரும் 2027-ஆம் ஆண்டில் பூமி முன்னெப்போதும் இல்லாத அளவில் மிக அதிக வெப்பநிலையைப் பதிவு செய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய தட்பவெப்ப மாற்றங்களால் மழைப்பொழிவு குறைந்து வறட்சி ஏற்படவோ அல்லது எதிர்பாராத இயற்கை பேரிடர்கள் நிகழவோ வாய்ப்புள்ளதால், பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ள உலக நாடுகள் இப்போதே தயாராக வேண்டும் என்பது அவசியமாகிறது. 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments