அசைவ உணவு பிரியர்கள் மிகவும் விரும்பும் மீன் உணவுகளில் சுறா மீன் முக்கியமானது. இது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் உயர்ந்த மீன் ஆகும். சுறா மீனின் ஊட்டச்சத்துகளை அறிந்து கொண்டால், இந்த மீனை மட்டுமே உண்ண விரும்புவீர்கள். வளரும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சுறா மீன் சிறந்த உணவாகும். இது உடலுக்கு தேவையான நல்ல கொழுப்புகள், புரதங்கள், மற்றும் பல சத்துக்களை கொண்டுள்ளது.
சுறா மீனில் உள்ள சத்துக்கள்:
சுறா மீனில் உள்ள அதிகப்படியான புரதச்சத்து வளரும் குழந்தைகளுக்கு மிக முக்கியமானது, ஏனெனில் இது அவர்களுக்கு தேவையான திடமான புரதச்சத்தும் மற்றும் இதர கனிமங்களை அதிகமாக கொண்டுள்ளது. இது குழந்தைகளின் உயரம் மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும், மேலும் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும். விட்டமின் பி, பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, அமினோ அமிலங்கள், பொட்டாசியம் சத்து மற்றும் ஒமேகா 3 பேட்டி ஆசிட் அதிகமாக உள்ளது. இது உடலுக்கு தேவையான நல்ல கொழுப்புகளை சரிவர பராமரிக்கும், மேலும் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களுக்கு நல்ல மருந்தாகும். மூளைக்கு தேவையான நுண்ணூட்டச் சத்துக்களை அளிப்பதால், இந்த மீனை தொடர்ந்து உண்ணும் போது நினைவாற்றல் மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
பாலூட்டும் தாய்மார்களுக்கு:
பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த சுறா மீன் உணவு மிக சிறந்த உணவாகும் ஏனென்றால் தாய்மார்களுக்கு பால் சுரக்கும் தன்மையை அதிகரித்து குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பால் மூலம் கடத்தும். இடுப்பு வலி முதுகு வலி கை கால் வலி உள்ளவர்கள் சுறா மீனை தொடர்ந்து உணவாக எடுத்துக் கொண்டு வந்தால் அவர்களின் உடல் வலுப்பெறும்.
நரம்பு மண்டலத்தை பாதுகாக்க:
நரம்பு மண்டலத்தை பாதுகாக்க உதவும் உணவுகளில் சுறா மீன் ஒன்றாகும். நரம்பு தளர்ச்சி மற்றும் உடல் தளர்வு நோய்கள் உள்ளவர்கள் சுறா மீனை தொடர்ந்து உண்ணும்போது, உடலில் நரம்புகள் வலுப்பெற்று, ரத்த ஓட்டம் சீராகும், இதனால் ஞாபக மறதி நோய்கள் குணமாகும் மற்றும் நினைவாற்றல் அதிகரிக்கும்.
நரம்பு தளர்ச்சி மற்றும் தசை தளர்ச்சி நோய்:
நரம்பு தளர்ச்சி மற்றும் தசை தளர்ச்சி நோய்களால்அவதிப்படுபவர்கள் எலும்புகளில் தேய்மானம் ஏற்படும். சுறா மீனை உணவாக உண்ணும்போது, எலும்பு டென்சிட்டி அதிகரித்து, எலும்பு சம்பந்தப்பட்ட நோய் அறிகுறிகளும் பாதிப்புகளும் குணமாகும்.
புரதம் குறைபாடு நோய்கள்:
சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களின் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து, புரத அளவு குறைந்து விடும். இதனால் உடல் சோர்வு ஏற்படும். இத்தகைய நிலையில் உள்ளவர்களுக்கு சுறா மீனை வாரம் இரு முறை உணவாக சேர்ப்பது அவர்களுக்கு தேவையான புரதத்தை இயற்கையாக வழங்கும்.
சுறா மீன் புட்டு செய்முறை:
சுறா மீனை நன்றாக கழுவி, இட்லி பானையில் வைத்து அவிக்கவும். பின்னர் தோள்களை நீக்கி, சதைப்பற்றுக்களை எடுத்து தனியாக வைக்கவும். ஆவியில் வந்த சதைகளை பிசைந்து, எலும்புகளை நீக்கவும். கடாயில் எண்ணை ஊற்றி, கடுகு, சீரகம், பச்சை மிளகாய், வெள்ளை பூண்டு ஆகியவற்றை தாளித்து, வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும். பிசைந்த சுறா மீன் சதையை சேர்த்து, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும். புட்டு பதம் வந்ததும், மிளகுத்தூள், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும். இந்த சுவையான சுறா மீன் புட்டுவை வாரம் இரு முறை குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உள்ளிட்ட அனைவரும் உணவாக எடுத்து உடல் ஆரோக்கியத்தை பேணிக் காக்கலாம்.
