Home Uncategorized தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த டி ராஜேந்தர்!

தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த டி ராஜேந்தர்!

கேளிக்கை வரியை குறைத்துள்ள தமிழக அரசுக்கு நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி ராஜேந்தர் நன்றி

திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை குறைத்துள்ள தமிழ்நாடு அரசுக்கு நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி ராஜேந்தர் நன்றி தெரிவித்துள்ளர். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: 

எட்டு சதவீதத்தில் இருந்து நான்கு சதவீதமாக கேளிக்கை வரி பாதியாக குறைப்பு. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு. தமிழக அரசு கேளிக்கை வரியை குறைத்திருக்கிறது, தமிழ் திரைப்பட உலகின் வலியை குறைத்திருக்கிறது. மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதல்வர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

Exit mobile version