Home Uncategorized கொரோனா: கேரளா முதலிடம்! 

கொரோனா: கேரளா முதலிடம்! 

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது கேரள மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பொது இடங்கள், பயணங்களின் போது அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

2019 ஆம் ஆண்டு கொரோனா உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது கொரோனா தொற்றின் போது லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அந்த பாதிப்பில் இருந்து பலரும் இன்னும் மீண்டு வராத நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் தொடங்கி இருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2710 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் தான் அதிகபட்சமாக கொரோனா பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கேரளாவில் மட்டும் 1147 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version